பிரான்ஸ் நாட்டு பொருளாதார சட்ட விதிக்கமைய தபால் முத்திரைகளை தனி நபர்களும் கட்டளைகளைப் பெற்று பிரசுரம் செய்யலாம், இதற்கமைய தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலாளர் நாயகம் க.பத்மநாபா, தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் ஶ்ரீ சபாரெத்தினம் மற்றும் தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத் செயலதிபர் உமா மகேஸ்வரன் போன்றொரின் முகம் பதித்த தபால் முத்திரைகள் பிரான்ஸ் நாட்டில் ஈழ ஆதரவாளர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் முகம் பதித்த தபால் முத்திரையும் ஆதரவாளர்களினால் பதிப்பிக்கப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சனி, 31 டிசம்பர், 2011
பிரான்ஸ் நாட்டில் ஈழப் போராட்ட தலைவர்களின் தபால் முத்திரை வெளியீடு!
பிரான்ஸ் நாட்டு பொருளாதார சட்ட விதிக்கமைய தபால் முத்திரைகளை தனி நபர்களும் கட்டளைகளைப் பெற்று பிரசுரம் செய்யலாம், இதற்கமைய தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலாளர் நாயகம் க.பத்மநாபா, தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் ஶ்ரீ சபாரெத்தினம் மற்றும் தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத் செயலதிபர் உமா மகேஸ்வரன் போன்றொரின் முகம் பதித்த தபால் முத்திரைகள் பிரான்ஸ் நாட்டில் ஈழ ஆதரவாளர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் முகம் பதித்த தபால் முத்திரையும் ஆதரவாளர்களினால் பதிப்பிக்கப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி, 30 டிசம்பர், 2011
இருட்டில் கறுப்பு ஆட்டைத் தேடும் தமிழ் ஒலி வானொலி! - ஒலி ஆதாரம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அப்பாவி மக்களிடம் விடுதலைப் புலிகள் அமைப்பு புலம்பெயர்ந்த நாடுகளில் இப்போதும் பலமாக இருப்பதாகவும், அதனால் தமிழீழத்தை விரைவில் பெற்று விடுவோமென்று போலியான வாக்குறுதிகளை பரப்பி விட்டு, பண வசூலிப்பை மேற்கொள்ளுகின்றனர். பணத்தை கையகப்படுத்தலில் ஏற்படும் போட்டி காரணமாக பல குழுக்களாகப் பிளவுபட்டுள்ளதுடன் மோதல்களும் மேலைத்தேய நாடுகளில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
வியாழன், 29 டிசம்பர், 2011
சுவிஸில் விடுதலைப் புலி வியாபாரிகளின் கலை நிகழ்ச்சி - மக்கள் பீதியில்! - காணொளி
மேலைத்தேய நாடுகளில் வாழும் பிளவுபட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வியாபாரிகள் எதிர்வரும் புத்தாண்டு தினத்தில் இந்திய கலைஞர்களைக் கொணர்ந்து நிகழ்ச்சிகள் நடாத்துவதன் மூலம் தங்களது வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டத்தில் இறங்கி உள்ளனர். சுவிற்சர்லாந்து நாட்டில் "புத்தாண்டில் புது நிமிர்வு" எனும் தலைப்பில் ஒரு அணியும், "புதிய மகிழ்வு" எனும் தலைப்பில் இன்னொரு அணியினரும் கலை நிகழ்ச்சியினை புத்தாண்டு தினத்தில் நடாத்தவுள்ளனர்.
செவ்வாய், 27 டிசம்பர், 2011
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக உறுப்பினரின் பாலியல் வக்கிரம் அம்பலம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் உதிரியாகிய சிலர் தமிழீழ மீட்பர்கள் தாமென தம்பட்டம் அடித்து சுயநல வாழ்வியலுக்கான பணமீட்டுதலை ஆரம்பித்துள்ளனர், விடுதலைப் போராளிகள் எனும் நாமத்தைப் பயன்படுத்தி மேலைத்தேய நாடுகளில் வாழும் தமிழர்களிடன் அனுதாபத்தை ஏற்படுத்தி அப்பாவிப் பெண்களிடன் பாலியல் வக்கிரங்களை நடாத்தி வருகின்றனர்.
ஞாயிறு, 25 டிசம்பர், 2011
தமிழ் சிவில் சமூகத்துக்கு ஆங்கிலத்தில் பதிலளித்த சம்பந்தன் - கடிதம் இணைப்பு
வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதுடன் அதற்கான முழுமையான ஆட்சி அதிகாரம் வேண்டும் அத்துடன் தமிழ்மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்றெல்லாம் அரசாங்கத்திடம் கேட்பதாகக் கூறி போலிக் கண்ணீர் வடித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தலைவர் இரா.சம்பந்தனும் தமிழ் மக்களை காலம் காலமாக ஏமாற்றி வருவதனை மறுப்பதற்கில்லை.
சனி, 24 டிசம்பர், 2011
தமிழ் சிவில் சமூகத்துக்கு பதிலளிக்கிறார் இரா.சம்பந்தன்
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தை மூடுமந்திரமாகவே உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும், பல கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் ஆதங்கம் தெரிவித்துள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிக்கு செவ்வி வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்த கருத்தின் பிரகாரம் அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தை விடயங்கள் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற மூவரையும் தவிர வேறெவருக்கும் தெரிந்திருப்பதில்லை (செவ்வி நிமி 45:00), அடுத்த நாள் பத்திரிகைச் செய்தியினைப் பார்த்தே தெரிந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளி, 23 டிசம்பர், 2011
மழலையின் பாடலில் ஆனந்தக் கண்ணீர் வடித்த நடுவரும் விஜய் தொலைக்காட்சியும்! - காணொளி
புதன், 21 டிசம்பர், 2011
ஈழத்துப் பாடகர் சாந்தனின் புதல்வன் நடிகர் கோகுலன்.
ஈழத்தின் பாடகர்களாக பலர் இருந்த போதிலும், சிலரே பிரபல்யம் பெற்று விளங்கினர், அவர்களிலும் மிகச்சொற்பமானவர்களே இன்றும் நிலைத்து நிற்கின்றார்கள், அந்த வரிசையில் நூற்றுக் கணக்கான போர்க் கால எழுர்ச்சிப் பாடல்களைப் பாடி மக்களின் மனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியப் பாடகர்களாக இடம் பிடித்துக் கொண்ட சார்ந்தன் மற்றும் சுகுமார் போன்றவர்கள் முக்கியமானவர்களாவர்.
குறியீடு :
ஈழத்துப் பாடகர்,
கோகுலன்,
சாந்தன்,
நடிகர்
செவ்வாய், 20 டிசம்பர், 2011
தமிழக சினிமா பாடலாசிரியர்கட்கு நிகராக கிழக்கிலங்கையில் உதித்த கவிஞன்!
தமிழ் ஆக்க இலக்கியத்துறையில் தமிழகப் படைப்பாளிகளுள் ஈழத்துப் படைப்பாளிகள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் முதல் இன்றைய இளம் படைப்பாளிகள் ஈறாக எண்ணற்ற படைப்பாளிகளின் பல படைப்புகள் வெளிவந்துள்ளன, அவற்றுக்குரிய தளங்களும், தட்டிக்கொடுப்புக்களும் உரிய காலத்தில் கிடைக்காமையால் பல காத்திரமான படைப்புகள் காணாமலே போய் விட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் ரெலோவுக்கு கதவடைப்பு!
குறியீடு :
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,
ரெலோ,
விரிசல்
திங்கள், 19 டிசம்பர், 2011
அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாக ஈபிடிபி - அரசாங்கம் பேச்சுவார்த்தை (அறிக்கை இணைப்பு)
ஞாயிறு, 18 டிசம்பர், 2011
நாடுகடந்த தமிழீழ பாராளுமன்ற உறுப்பினராக ஈபிடிபி சிவா நியமனம்!
நாடுகடந்த தமிழீழத்தவர்களுள் குழுநிலைவாதம் ஏற்பட்டதால் முரண்பாட்டவர்கள் தங்களது மேலதிக வருமானத்துக்காக குழுக் குழுக்களாக பண வசூலிப்பைத் தொடர்கின்றார்கள், இவர்களுள் ஒரு குழுவான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினருக்கு ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் லண்டன் வெளிப் பகுதி (லண்டன் – பேர்மிங்ஹாம்) வெற்றிடத்துக்காக ஈபிடிபி முன்னாள் உறுப்பினர் சிவா எனப்படும் வன்னியசிங்கம் குணசீலன் நாடுகடந்த தமிழீழத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பிரதமர் உருத்திரகுமாரனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சனி, 17 டிசம்பர், 2011
தமிழீழப் போராட்ட வியாபாரத்துக்கு மூலதனம் தாலிக்கொடி!
தமிழீழம் எனும் சொல்லை முதலீடாக்கி ஆங்காங்கே வியாபார உத்திகள் நடைபெற்று வருகின்றன, இதற்கு உதாரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் உதிரியாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தமிழீழ விடுதலை போராட்டம் எனும் பெயரில் சேர்த்த நிதியினையும், சொத்துக்களையும் தன் வசப்படுத்த பலத்த பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர், இதனாலேயே விடுதலைப் புலிகள் பல கூறுகளாகி ஆளுக்கு ஆள் துரோகியென்றும், மோசடிக்காரன் என்றும் பச்சோந்தியென்றும் சேறடிப்புக்களை நடாத்தி தமிழீழத்தின் பெயரால் சேர்த்த சொத்துக்களை தமக்கே உரிமையாக்கிக் கொள்கின்றனர்.
வெள்ளி, 16 டிசம்பர், 2011
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை (இணைப்பு)
'கலாபூஷணம்' விருது பெறும் தமிழ்க் கலைஞர்கள் பட்டியல்.
வியாழன், 15 டிசம்பர், 2011
அனைவரையும் கொள்ளை கொண்ட இணைய அரட்டை.
புதன், 14 டிசம்பர், 2011
யாழ் மாநகரசபையில் மனுவல் மங்களநேசன் புரியும் அடாவடித்தனம்! - காணொளி
யாழ் மாநகரசபையின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று 2011.12.13 ஆம் திகதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு மாநகர முதல்வர் தலைமையில் மாநகர மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அமர்வின் போது மாநகரசபை உறுப்பினர் மனுவல் மங்களநேசன் அநாகரீகமாக நடந்து கொண்டார், ஏனைய உறுப்பினர்களால் ஒழுங்குப் பிரச்சனை கோரிய போதிலும் ஒலிவாங்கியினால் அவர்களைத் தாக்க எத்தனித்ததுடன் கைவீச்சுடன் கூடிய அடாவடித்தனம் புரிந்தார்.
மக்கள் ஆதரவின்றி பின் கதவால் உள்நுழைந்தவரே சுமந்திரன் - பாராளுமன்றில் ஶ்ரீரங்கா உரை! - காணொளி
ஶ்ரீ லங்கா பாராளுமன்றத்தில் நேற்று 2011.12.13 ஆம் திகதி தகவல் ஊடகத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதம் இடம்பெற்ற போது உரையாற்றிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்காவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமன பாராளுமன்ற உறுப்பினர் சுமந்தினனுக்கும் காரசாரமான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
செவ்வாய், 13 டிசம்பர், 2011
பிரபாகரன்: ஓர் அவலத்தின் அடையாளம் – யோகா-ராஜன்
“தன்னளவில் ஒடுக்குமுறையைக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் விடுதலை என்பது மிகக் கடுமையானது“ அதாவது தன்னுள் வைத்திருக்கும் முழு வளங்களையும் சரிவரப் பயன்படுத்தும் பட்சத்தில்தான், ஒடுக்கு முறைக்குட்பட்டிருக்கும் ஒரு சிறுபான்பைச் சமூகத்தின் விடுதலை சாத்தியமாகும். ஆனால் பிரபாகரன் இச் சூத்திரத்தின் உள் அர்த்தத்தைப் புரிந்திருக்கவில்லை. புரிந்துகொள்ளத் தலைப்படவும் இல்லை. தன்னார்வத்துடன் இயங்கி வந்த பல சமூக அமைப்புக்களுக்கு தடைவிதித்தார். சன சமூக நிலையங்களைக் கூட தமது கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இயங்க வைத்தார். முஸ்லிம்களை ஒடுக்கினார். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சாதிய அமைப்புகக்களை இயங்க விடாமல் தடுத்தார். மற்றும் தமிழ்த் தேசியம் எனும் ஒரே நேர்கோட்டில் பயணித்த அனைத்து விடுதலை அமைப்புக்களுக்கும் சாவுமணியடித்தார்.
திங்கள், 12 டிசம்பர், 2011
கடந்த கால தவறுகள் இனியும் வேண்டாம், வாருங்கள்! - டக்ளஸ் தேவானந்தா பகிரங்க அழைப்பு
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 46 பேர் விடுதலை. - காணொளி
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான 46 பேர் புனர்வாழ்வு பெற்று நேற்று 2011.12.11 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள், முள்ளிவாய்க்கால் அவலத்தினைத் தொடர்ந்து ஶ்ரீ லங்கா படையினரால் கைதான அல்லது சரணடைந்த 11 ஆயிரம் பேருக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர், புனர்வாழ்வுடன் கூடிய பயிற்சியினைப் பெற்றுவரும் எஞ்சியுள்ள 700 பேரும் 2012 ஆம் ஆண்டு விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஞாயிறு, 11 டிசம்பர், 2011
கட்டண விளம்பர எச்சரிக்கையுடன் விடுதலைப் புலிகளின் குழு நிலை மோதல்.
குறியீடு :
எச்சரிக்கை,
விடுதலைப் புலிகள்,
ஜீ ரீவி
சனி, 10 டிசம்பர், 2011
வெள்ளி, 9 டிசம்பர், 2011
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக உறுப்பினரின் காமலீலை ஒலிப்பதிவுடன் அம்பலம்!
ஶ்ரீ லங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட தலைமைகள் அழிக்கப்பட, கைதானோர் சிறைச்சாலைகளிலும், புனர்வாழ்வு பெற்றோர் விடுதலையாகி பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர், இதற்கு விதிவிலக்காக எஞ்சியோர் சிலர் பல குழுக்களாகப் பிரிந்து மேற்கத்திய நாடுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கவுள்ளதாகக் கூறி நிதி வசூலிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வியாழன், 8 டிசம்பர், 2011
போதிதர்மன் தமிழனா? - காணொளி
அண்மையில் வெளிவந்த "7 ஆம் அறிவு" திரைப்படத்தின் மூலம் தமிழன் என வர்ணிக்கப்படும் "போதிதர்மன் தமிழனா? " எனும் வினாவுக்கு விடையளிக்கக் கூடிய விதத்தில் கடந்த 2011.11.26 ஆம் திகதி தமிழக பெரியார் திடலில் இடம்பெற்ற சமூகநீதி காவலர் மாவீரர் வி.பி.சிங் நினைவு நாள் கருத்தரங்கத்தில் பேராசிரியர் கருணானந்தம் உரையாற்றினார். பல்லவர்கள் தமிழர்கள் அல்ல, இந்த திரைப்படத்தின் மூலம் சில திரிபுகள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் கருணானந்தம் வெளிப்படுத்தியுள்ளார்.
செவ்வாய், 6 டிசம்பர், 2011
வன்னி மக்கள் பட்டினிச்சாவு - போருக்கு சேர்த்த பணம் எங்கே? - ஒலி இணைப்பு
வன்னியில் ஶ்ரீ லங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உக்கிர மோதல் இடம்பெற்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காக புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் பலத்த பிரயத்தனங்களைச் செய்து வந்தார்கள், அந்தந்த நாட்டு அரசாங்கங்களை விடுதலைப் புலிகளின் பக்கத்துக்கு திரும்பிப் பார்க்கக் கூடியதாகவும், அத்துடன் அந் நாட்டு மக்களின் அனுதாபத்தை பெறவும் போராட்டங்களை தமிழீழ விடுதலை புலிகள் விரிவுபடுத்தி இருந்ததுடன் தமிழர்களிடம் பண வசூலிப்பையும் மேற்கொண்டனர்.
ஶ்ரீ லங்கா பாராளுமன்றில் ஏற்பட்ட கைகலப்பும், தடைப்பட்ட வரவுசெலவுத் திட்ட உரையும்! - காணொளி
ஶ்ரீ லங்கா பாராளுமன்றத்தில் கடந்த 2011.12.21 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்த போது எதிர்க் கட்சியினர் சுலோக அட்டைகளைத் தாங்கி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் அச் சுலோக அட்டைகளை ஆளும் தரப்பினர் பறிக்க முற்பட்ட போது சபையில் கைகலப்பு ஏற்பட்டது.
ஞாயிறு, 4 டிசம்பர், 2011
கூட்டமைப்பு சம்பந்தனின் காணி அபகரிப்பினால் பாராளுமன்றில் சலசலப்பு !
வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு, பெரும்பான்மையினக் குடியேற்றங்கள், தமிழ்க் கலாசாரங்களை சீரழிக்கும் நடவடிக்கைகள் தமிழின விகிதாசாரத்தை பாதிக்கும் நிகழ்வுகள் மற்றும் இன சுத்திகரிப்புகள் இடம்பெறுமாயின் மீள் இணக்கமோ, இனங்கள் இணைந்து வாழவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ முடியாது எனக் கூறிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் திருகோணமலையில் மக்களின் காணிகளைச் போலிப் பத்திரங்களைக் கொண்டு அபகரிப்புச் செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சனி, 3 டிசம்பர், 2011
குமரன் பத்மநாதனுக்கு சர்வதேச பிடிவிறாந்து.
புதன், 23 நவம்பர், 2011
தனூஸுக்கு ஏன் இந்த கொலைவெறி! - காணொளி
அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், ஔவையார், இளங்கோ அடிகள் போன்ற பற்பல விற்பன்னர்கள் தமிழைச் செம்மைப்படுத்த அரும்பாடுபட்டு உழைத்தார்கள், அவர்களின் நிகரற்ற சேவையினாலேயே இன்று தமிழ்மொழி செம்மொழியாகத் திகழ்கின்றது. ஆங்கில மோகத்தில் சிக்கியுள்ள எமது இளம் தலைமுறையினர் எதிர்காலத்தில் தமிழை முற்றாக மறந்து போகக் கூடிய விதத்தில் தற்போது துள்ளிசையில் தமிங்கில திரைப்படப் பாடல்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஞாயிறு, 20 நவம்பர், 2011
லண்டலில் மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் தடங்கல்!
தமிழீழ விடுதலைப் புலிகளால்
வருடாந்தம் நவம்பர் 27 ஆம் திகதி அனுட்டிக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள், 2009 ஆம்
ஆண்டு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை முற்றுப் பெற்றதாக
அறிவிக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் முக்கியத்தர்கள் அரச படைகளிடம் சரணடைந்ததைத்
தொடர்ந்து விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் முடிவடைந்தன, ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில்
வாழும் விடுதலைப் புலிகள் இம்முறை மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு செய்துள்ள
போதிலும் சிறு சிறு பிரிவுகளாகவுள்ள அணிகள் ஒன்றுக்கொன்று மோதலில் ஈடுபட்டுள்ளதால்
நிகழ்வு தடைப்படும் நிலையை எட்டியுள்ளது.
வியாழன், 17 நவம்பர், 2011
சமாதான உடன்படிக்கையின் தோல்வி "அமைதிக்கான அடமானங்கள்" - வீடியோ இணைப்பு
ஶ்ரீ லங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கை தோல்வி அடைந்தது தொடர்பாக கடந்த 2011.11.12 ஆம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் "அமைதிக்கான அடமானங்கள்" (Pawns of Peace) எனும் தலைப்பில் 208 பக்கங்களைக் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
ஞாயிறு, 13 நவம்பர், 2011
மீளா துயில் கொண்ட சிவதாசன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
வட இலங்கை இடதுசாரி தலைவர்களுள் ஒருவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இரண்டுமுறை பதவி வகித்திருந்தவருமான தோழர் சிவதாசன் அவர்கள், இன்று (2011.11.13) மாலை தனது 77வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் 2006ல் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தும் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருந்த தோழர் சிவதாசன் அவர்கள் ஏறத்தாழ 50 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்ட விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் இடதுசாரி அரசியல் தலைவர்களுள் ஒருவர் என்பதுடன் அறுபதுகளின் பிற்பகுதியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்திருந்த பல ஆயுத அரசியல் போராட்டங்களின் முன்னோடிகளுள் ஒருவருமாவார். இலங்கையின் மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த சிறந்த மொழி பெயர்ப்பாளருமான தோழர் சிவதாசன் அவர்கள் இறக்கும்வரையில் இலங்கையின் ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் விமோசனத்திற்காக அயராது குரல்கொடுத்துவந்திருந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அரசியலில் கத்துக்குட்டி - எரிக் சொல்ஹைம்.
2001 ஆம் ஆண்டு தொடக்கம் 10 தடவைகள் நோர்வே நாட்டின் சுற்றாடல் மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹைம் அவர்களைச் சந்தித்த தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியலில் கத்துக்குட்டியாக இருந்து வந்தாரென இந்திய செய்தி ஊடகமான ஐ ஏ என் எஸ் இற்கு எரிக் சொல்ஹைம் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
திங்கள், 7 நவம்பர், 2011
கொழும்பு மாநகரசபைக்கு மனோவின் ஆதரவைக் கோரிய ரணிலின் கடிதம்.
கொழும்பு மாநகரசபையின் ஆட்சிப் பொறுப்பைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிராததால் மாநகரசபை முதல்வர் ஏ.ஜே.எம். முஸாமில் நிர்வாகத்தைக் கொண்டு நடாத்துவதில் சிக்கல்கள் நிகழக் கூடும் என உணர்ந்ததால் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவினை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் கோரியுள்ளார்.
சனி, 5 நவம்பர், 2011
ஶ்ரீ லங்கா தொடர்பான இணையத்தளங்கள் ஊடக - தகவல் அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும்.
வியாழன், 3 நவம்பர், 2011
விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியின் செவ்வி. - காணொளி
ஶ்ரீ லங்காவில் இடம்பெற்ற விடுதலை புலிகள் மீதான யுத்தம் தொடர்பாக "Freedom Speaks"எனும் ஆவண திரைப்படம் அண்மையில் கொழும்பில் அங்குராப்பணம் செய்யப்பட்டது, அந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை "அததெரண தமிழ்" இணையத் தளம் சந்தித்தது, அவர்களுள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டாயத்தின் பேரில் இணைக்கப்பட்ட புதுக்குடியிருப்பைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளி விஸ்வநாதன் நிரோசா என்பவரை செவ்வி கண்ட போது தெரிவித்த கருத்துக்கள் காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, 30 அக்டோபர், 2011
உலக சனத்தொகை 7 பில்லியன்.
சனத்தொகைப் பெருக்கத்தால் உலகம் திண்டாடிக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் உலக சனத்தொகை இன்னும் சொற்ப நேரத்தில் (2011.10.31 ஆம் திகதி)7 பில்லியனை(700 கோடி) எட்டுகின்றது. இந்த 7 பில்லியன் சனத்தொகையில் நீங்கள் எத்தனையாவது உறுப்பினர் என்பதை பிபிசி உலக சேவை இணைய இணைப்பின் ஊடாக தெரிவிக்கின்றது.
சனி, 29 அக்டோபர், 2011
விடுதலைப் புலிகளின் தமிழ் இளையோர் அமைப்பின் கட்டமைப்பு - நவரெத்தினம் பிரபாகரன்
செவ்வாய், 25 அக்டோபர், 2011
விடுதலைப் புலிகள் 367 பேருக்கு தீபாவளியை முன்னிட்டு விடுதலை!
தற்காலிகமாக மூடப்படும் விக்கிலீக்ஸ் இணையத் தளம்!
ஞாயிறு, 23 அக்டோபர், 2011
இலங்கையின் போர்க் குற்றம்!, ஆஸ்திரேலிய ஏபிசி தொலைக்காட்சியில் ஈழநதி எனும் மீனா – "தி நேசன்"
இலங்கையில் தமிழ்
மக்கள் மீது 2009ஆம் ஆண்டு
மே
மாதம் இடம்பெற்ற போர்க் குற்றத்தின் நீட்சியாக இலங்கைத் தமிழ்ப் பெண் மீனா என்பவரை ஆதாரம் காட்டி
ஆஸ்திரேலிய ஏ.பி.சி. தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய காட்சிப் பதிவு தொடர்பாக "தி நேசன்" இன்று 2011.10.23 ஆம் திகதி தமிழ்ப் பெண் மீனா பற்றிய மேலதிக தகவல்களை வழங்கியுள்ளது.
திங்கள், 17 அக்டோபர், 2011
தமிழர்கள் நடாத்திய மிருசுவில் கொள்ளைக்கு இன சாயமூட்டிய ஊடகங்கள். - பட இணைப்பு
2011.10.15 ஆம் திகதி சனிக்கிழமை இரவு மிருசுவில், உசன் வடக்கில் உள்ள துரைசிங்கம் தர்சினி என்பவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் பல தரப்பட்ட எழுந்தமான செய்திகள் வெளிவந்துள்ளன, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் தென் பகுதியைச் சேர்ந்த சிங்கள மாணவர்களினால் தமிழர் வீடுகளில் கொள்ளை நடைபெறுவதாக சித்தரிக்கும் பொய்ச் செய்திகளை பதிவேற்றம் செய்து தமிழ் மக்களைக் குழப்பி விட்டு அதில் இன்பம் காண பகீரதப் பிரயத்தனங்களை சில ஊடகங்களும், இணையங்களும் செய்து வருகின்றன.
ஞாயிறு, 16 அக்டோபர், 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடையே ஒற்றுமையில்லை - வினோ பா.உ.
தேர்தல் காலத்தில் மாத்திரம் ஒற்றுமை பற்றிப் பேசி மக்களிடம் வாக்கு வேட்டைக்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தேர்தல் முடிந்ததும் ஒற்றுமையை மறந்து விடுகின்றனர், இவ் ஒற்றுமையின்மை நீடிக்குமானால் எம்மால் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதரலிங்கம் 2011.10.15 ஆம் திகதி (நேற்று) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி தொடக்க நிகழ்வில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
புதன், 12 அக்டோபர், 2011
விடுதலைப் புலிகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட கவிஞை செல்விக்கு நினைவேந்தல்.
சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் நாவலாசிரியர்களின் கூட்டமைப்பான PEN அமைப்பினரால் (Poets Essayists and Novelists) உலகப் புகழ்பெற்ற கவிதைக்கான சர்வதேச விருது (Poetry International Award) பெற்ற செல்வி எனப்படும் சேமமடுவைச் சேர்ந்த செல்வநிதி தியாகராசா 1991.08.30 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதையின் பின்னர் கொல்லப்பட்டார்.
குறியீடு :
கவிஞை செல்வி,
நினைவேந்தல்,
படுகொலை,
விடுதலைப் புலிகள்
செவ்வாய், 11 அக்டோபர், 2011
திருட்டுப் பதிவில் ஊடகம் நடாத்தும் "எழு தமிழா" இணையம்.
"கோத்தாவின் பிரதமர் கனவு தவிடு பொடியானது! மனோவின் கட்சி ஆட்சியைத் தீர்மானிக்கும்!" எனும் தலைப்பில் நேற்று களத்துமேடு பதிவு செய்த கட்டுரையை அனுமதியின்றி "எழு தமிழா" எனும் இணையத் தளம் பதிவேற்றம் செய்துள்ளமை கண்டனத்துக்கு உரியது. வலைப் பதிவர்களின் ஆக்கங்களை அனுமதியின்றி மீள் பதிவேற்றம் செய்வதானது ஊடக விபச்சாரத்துக்கு ஒப்பானதாகும், இல்லையேல் குறைந்தபட்சம் ஆக்கத்தின் இறுதியில் பெறப்பட்ட தளத்தினை நன்றியுடன் அடிக் குறிப்பில் காட்ட வேண்டியது ஊடக தர்மமாகும்.
திங்கள், 10 அக்டோபர், 2011
கோத்தாவின் பிரதமர் கனவு தவிடு பொடியானது! மனோவின் கட்சி ஆட்சியைத் தீர்மானிக்கும்!
குறியீடு :
உள்ளூராட்சி மன்றம்,
கொழும்பு,
தேர்தல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)