வெள்ளி, 11 அக்டோபர், 2013

சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு! (படங்களுடன்)

வட மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் இன்று 11.10.2013 காலை வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.  இந் நிகழ்வுக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சமூகம் கொடுக்காமல் தங்களது எதிர்ப்பைக் காட்டினர், இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் ஏற்பட்டுள்ள பாரிய பிழவு வெளிச்சத்துக்கு வந்தது.

வியாழன், 10 அக்டோபர், 2013

ஶ்ரீ லங்காவின் புதிய பிரதியமைச்சர்களும் வட மாகாண அமைச்சரவையும் ஒரே பார்வையில்!

ஶ்ரீ லங்கா புதிய பிரதியமைச்சர்களாக இன்று (10.10.2013)ஒன்பது பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதிவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அத்துடன் நீண்ட இழுபாடுகளுக்கு மத்தியிலான வட மாகாணசபைக்கான அமைச்சரவை விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 7 அக்டோபர், 2013

மரணித்த ஊடகத் தோழர்கள் நடா மற்றும் ரவிவர்மனுக்கு கண்ணீர் அஞ்சலி !

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்த ஊடகத் தோழர் பரமக்குட்டி மகேந்திரராஜா எனும் ரவிவர்மன் மற்றும் வடக்கிலங்கை யாழ்ப்பாணம் துன்னாலை வடக்கைச் சேர்ந்த ஊடகத் தோழர் எஸ்.நடராஜா எனும் நடா ஆகியோரின் மறைவுச் செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வட மாகாண முதலமைச்சராக சி.வி. விக்கி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்.

வட மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் 07.10.2013 இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.  (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன )

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

விக்கி பிரிவினைவாத ஆயுத போராளியல்ல என்பது சிலரின் இன்றைய கவலை - மனோ கணேசன்

இந்த தீவில் தனியொரு தமிழ் நாட்டிற்காக ஆயுதம் தூக்கி போராடிய வரலாறு வடக்கு முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்கினேஸ்வரனுக்கு கிடையாது. இந்த அடிப்படை உண்மை, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சில சிங்கள் தீவிரவாத குழுக்களுக்கு மனதுக்குள்ளே பெரும் மனக்கவலையை தந்துள்ளது. இனவாதிகளின் நாடிபிடித்து பார்க்கும் வல்லமை எனக்கு இருப்பதாக நான் நம்புவதால் இது எனக்கு புரிகிறது என வி எப்எம் தனியார் வானொலியில் ஒலிபரப்பாகும் "சித்தாமுல்ல" என்ற பிரபல சிங்கள நேரடி அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

வியாழன், 17 மே, 2012

சரத் பொன்சேகாவுக்கு நாளை விடுதலை?


தமிழின அழிப்புக்கு முன்னின்றவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுக்கு உரியவருமான சரத் பொன்சேகா நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதியால் விடுதலை  செய்யப்படவுள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனும் நிபந்தனைக்கேற்பவே சரத் பொன்சேகா விடுதலையாக இருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

2012.05.16 ஆம் திகதி இரவு பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் வீட்டில் திருமதி அனோமா பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் போது நாளை அல்லது நாளை மறுதினம் சரத் பொன்சேகா  விடுதலை செய்யப்படுவாரென ஜனாதிபதி கூறியதாக ஏஎப்பி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

வெள்ளி, 11 மே, 2012

ஈ பி ஆர் எல் எவ் (நாபா) துரைரெத்தினம் சுரேஸ் அணிக்கு தாவினார்!


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா பிரிவு கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரெத்தினம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சுரேஸ் அணியில் இணைந்து கொண்டுள்ளார்.

வியாழன், 10 மே, 2012

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் குளிர் காயும் தீய சக்திகளின் சுவரொட்டிகள்!


முள்ளிவாய்க்கால் அவலத்தின் பேரால் மீண்டும் தமிழ் மக்களை சிக்கலுக்குள் கொண்டு வர சில தீய சக்திகள் முயன்று வருகின்றனர், இதன் ஓரங்கமாக வவுனியா நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இத் தீய சக்திகளின் சுவரொட்டிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் "தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக முன்னிற்கும் இயக்கம்" எனும் பெயரில் சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----