இதனை மூடிமறைக்க முனைப்புக் காட்டும் இலங்கை அரசாங்கம் இப்போது சனல் 4 ஒளிபரப்பிய வீடியோ காட்சியின் மூலப் பிரதி கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டு தமிழ் ஒலியுடன் கூடிய வீடியோ காட்சியை இலங்கைத் தொலைக்காட்சியான சுவர்ணவாஹினியில் ஒளிபரப்பியது.
இந்த தமிழ் மொழியிலான வீடியோப் பதிவைப் பார்த்தவர்கள் அனைவருக்கும், இக் காட்சியின் மொழியாக்கம் போலியானது என்பது தெளிவாகப் புரிந்திருக்கும், இதில் உரையாடப்படும் மொழி நடையானது தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொள்ளாத வேற்று மொழியைக் கொண்டவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது புலனாகும்.
சிங்கள இராணுவத்தினரின் உரையாடலை நீக்கி விட்டு தமிழ்மொழியிலான உரையாடலைப் புகுத்தி இதுவே மூலப் பிரதியென இலங்கை அரசாங்கம் வித்தை காட்ட நினைப்பது வேடிக்கையாகத் தோன்றுகின்றது.
0.02 - 0.04 விநாடிகள் - அவன் ஓடுரான்டா இன்க கொன்டு வா, இங்க கொன்டு வா
0.13 - 0.15 விநாடிகள் - கன்ன கட்டு, கன்ன கட்டு
0.18 விநாடி - ஹரி ஹரி (சிங்களமொழியில் சரி சரி)
0.25 - 0.26 விநாடிகள் - மத்த ஆல கொன்டு வா, மத்த ஆல கொன்டு வா
0.37 - 0.38 விநாடிகள் - அட நீ என்ன படம் புடிக்கிர, மத்த ஆல இன்க வர சொல்லு, இன்க வா (இக் கூற்றில் வேற்று மொழியைச் சேர்ந்தவரால் கூறப்படுகின்றதென்பது தெளிவாகப் புலனாகின்றது)
0.52 - 0.54 விநாடிகள் - பூட் ரென்டை கலட்டி எடு, பூட் ரென்டையும் கலட்டி எடு, பூட்ஸ் எடு பூட்ஸ் எடு
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், இவர்கள் கொச்சைத் தமிழில் பேசியிருப்பதற்கான வாய்ப்பு இல்லாத காரணத்தினால், இவ் ஒலி மாற்றம் போலியானது என்பது குறிப்பிடத்தக்கது, அத்துடன் ஹரி ஹரி எனும் சிங்கள வார்த்தைப் பிரயோகம் கேட்பதனால் இது சிங்கள மொழி பேசக் கூடியவர்களால் இலங்கைப் போர்க்குற்ற வீடியோவில் செருகப்பட்டுள்ளது என்பது புலனாகின்றது. கணினியின் தொழினுட்பத்தினைக் கொண்டு தமிழ் ஒலியைப் புகுத்தியவர்கள் ஹரி ஹரி எனும் சிங்கள ஒலியை நீக்க மறந்தது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
இவ்வாறாக தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வேற்று மொழியினரைக் கொண்டே மூலப் பிரதியெனும் பொய்யான இந்த வீடியோ ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதானது இதன் மூலம் ஊர்ஜிதம் செய்யப்படுகின்றது, இவ் மூல வீடியோ பிரதி இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் உபய மேதாவெல கூறுவதானது ஒரு பொய்யை மறைக்க பல பொய்யை கூறுவதாகத் தென்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.