தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான 46 பேர் புனர்வாழ்வு பெற்று நேற்று 2011.12.11 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள், முள்ளிவாய்க்கால் அவலத்தினைத் தொடர்ந்து ஶ்ரீ லங்கா படையினரால் கைதான அல்லது சரணடைந்த 11 ஆயிரம் பேருக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர், புனர்வாழ்வுடன் கூடிய பயிற்சியினைப் பெற்றுவரும் எஞ்சியுள்ள 700 பேரும் 2012 ஆம் ஆண்டு விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.சந்திரகுமார் மற்றும் உதயன் அலஸ்டின், அமைச்சின் செயலாளர் ஏ. திஸ்ஸநாயக்க, புனர்வாழ்வுகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.