ஈபிடிபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈபிடிபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 19 டிசம்பர், 2011
ஞாயிறு, 18 டிசம்பர், 2011
நாடுகடந்த தமிழீழ பாராளுமன்ற உறுப்பினராக ஈபிடிபி சிவா நியமனம்!
நாடுகடந்த தமிழீழத்தவர்களுள் குழுநிலைவாதம் ஏற்பட்டதால் முரண்பாட்டவர்கள் தங்களது மேலதிக வருமானத்துக்காக குழுக் குழுக்களாக பண வசூலிப்பைத் தொடர்கின்றார்கள், இவர்களுள் ஒரு குழுவான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினருக்கு ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் லண்டன் வெளிப் பகுதி (லண்டன் – பேர்மிங்ஹாம்) வெற்றிடத்துக்காக ஈபிடிபி முன்னாள் உறுப்பினர் சிவா எனப்படும் வன்னியசிங்கம் குணசீலன் நாடுகடந்த தமிழீழத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பிரதமர் உருத்திரகுமாரனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிறு, 13 நவம்பர், 2011
மீளா துயில் கொண்ட சிவதாசன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)
வட இலங்கை இடதுசாரி தலைவர்களுள் ஒருவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இரண்டுமுறை பதவி வகித்திருந்தவருமான தோழர் சிவதாசன் அவர்கள், இன்று (2011.11.13) மாலை தனது 77வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் 2006ல் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தும் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருந்த தோழர் சிவதாசன் அவர்கள் ஏறத்தாழ 50 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்ட விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் இடதுசாரி அரசியல் தலைவர்களுள் ஒருவர் என்பதுடன் அறுபதுகளின் பிற்பகுதியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்திருந்த பல ஆயுத அரசியல் போராட்டங்களின் முன்னோடிகளுள் ஒருவருமாவார். இலங்கையின் மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த சிறந்த மொழி பெயர்ப்பாளருமான தோழர் சிவதாசன் அவர்கள் இறக்கும்வரையில் இலங்கையின் ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் விமோசனத்திற்காக அயராது குரல்கொடுத்துவந்திருந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
வெள்ளி, 29 ஜூலை, 2011
மௌனித்த இதயவீணை வானொலி மீண்டும் குரல் கொடுக்குமா!
சனி, 29 ஜனவரி, 2011
ஈபிடிபி மௌனித்துள்ள வடமராட்சி உறுப்பினர் கொலை!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் துப்பாக்கிக் கலாசாரம் இலங்கையில் முற்றுப் பெற்றுவிட்டது என அரசாங்கம் மார்தட்டிக் கொள்ளும் இந்த 2011 ஆம் ஆண்டில் துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தளிர்க்கின்றது என்பது போல யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள ஆனைவிழுந்தான் பகுதியில் ஓர் இளைஞன் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
செவ்வாய், 30 செப்டம்பர், 2008
டக்ளஸ், கருணா, பிள்ளையான் சந்திப்பு!

நேற்று முந்தினம் கொழும்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானுக்கும் இடையேயான சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
இச் சந்திப்பின் போது ஈபிடிபி யின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.வி.சிவாவும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திரு.கந்தையா அருமைலிங்கமும் கலந்து கொண்டுள்ளனர்.
இச் சந்திப்பு நட்புரீதியானது எனக் கூறப்பட்டாலும், எதிர்காலத்தில் இரு கட்சிகளும் இணைந்து அரசியல் கால் நகத்துதல் செய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.
2008.09.05 ஆம் திகதி வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் ஜனாதிபதி மகிந்த முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட போது அங்கு வருகை தந்த திரு.டக்ளஸ் தேவானந்தாவும், கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையான் சந்திரகாந்தனும் சந்தித்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
சனி, 30 ஆகஸ்ட், 2008
மட்டு. சிறைச்சாலையில் குண்டுத் தாக்குதல் !

பிள்ளையான் குழுவினரே இக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக ஈபிடிபியினர் குற்றம் சாட்டிய போதிலும் எவராவது கைது செய்யப்பட்டதாக அறிய முடியவில்லை. தங்களால் இத் தாக்குதல் நடத்தப்படவில்லையென ரிஎம்விபியினரின் ஊடகப் பேச்சாளர் மௌலானா பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலையினுள் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் காரணிகளை கண்டு பிடிக்க விசாரணை நடைபெறுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஈபிடிபி இனர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை:
கிழக்கில் வேலியே பயிரை மேய்கிறது அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
ஊடக அறிக்கை 28.08.2008


இதன் தொடர்ச்சியாக அண்மையில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த எமது நீண்ட கால உறுப்பினர் தோழர் அப்பாஸ் சுடப்பட்டதையும் மக்கள் அறிவார்கள்.
வாழைச்சேனையில் எமது உறுப்பினரான தோழர் சீலன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும், அதுகுறித்து இன்றுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எமது உறுப்பினர்களைக் கடத்தியது அஜித் தலைமையிலான ரி.எம்.வி.பி.யினர்தான் என்பதை நாம் குறிப்பிட்டிருந்தோம். இந்த விடயத்தில் தமது தலையீட்டை அரசியல் செல்வாக்குச் செலுத்தித் தப்பித்துக் கொண்டுள்ளனர்.
இத்தகைய அதிகார துஷ்பிரயோகமானது நீதி, நியாயம் கிடைக்கவிடாது, கிழக்கில் அச்சச் சூழலையே தோற்றுவித்துள்ளது. இத்தகைய பயங்கரமான சூழலின் பின்னணியிலேயே 29.08.2008 அன்று மட்டக்களப்பு சிறையில் நடந்த கைக்குண்டு வெடிப்புச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 6.30 மணிக்கு சிறையில் இருப்பவர்களை இயற்கை கடமைகளுக்காக திறந்துவிடும் வழக்கமான நேரத்திலேயே எமது உறுப்பினர்கள் மீது திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் செங்கலடியின் பொறுப்பாளர் தோழர் ரவி (தர்மரெட்ணம் ஈழமாறன்), தோழர் சேகர் (வீரகுட்டி சேகர்), தோழர் ஜெயகுமார் (யோகராசா ஜெயகுமார்), தோழர் விஜய் (மகேந்திரராஜ் - வினோதராஜ்), தோழர் விஜி (கோவிந்தன் - பிரதீப்), ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்களுடன் இருவர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு நிறைந்த சிறைக்குள்ளேயே இத்தாக்குதல் நடந்துள்ளது. சட்டம், ஒழுங்கில் இருக்கும் குறைபாடுகளையே இது கோடிட்டுக் காட்டுகிறது. எங்கும் பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சியையே மக்கள் கொண்டிருக்கின்றனர்.
இத்தாக்குதலை நடத்திய ரி.எம்.வி.பி. உறுப்பினரை எமது உறுப்பினர்கள் பார்த்துள்ளனர். எனினும் அது தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? இத்தகைய சூழலையா கிழக்கின் விடுவிப்பும் - ஜனநாயகம் என்றும் நம்புகின்றோம் என்று மக்களின் கேள்விகளுக்கு என்ன பதிலளிக்க முடியும். சட்டம், ஒழுங்கைச் செயற்படுத்த வேண்டியவர்கள், ஒரு குறிப்பிட்ட தரப்பை பாதுகாக்க செயற்படுகின்றனர்.
அப்படியாயின், அப்பாவிப் பொதுமக்களையும், அரசியல் சக்திகளையும் பாதுகாக்க வழியேதுமில்லையா? நீதிக்காகக் காத்திருப்போரை சிறையிலேயே கொலை செய்யும் கொடூரம்தான் கிழக்கின் தற்போதைய அரசியல் போக்காக மாறி இருக்கிறது.
மக்களே! அரசியல் பலத்தையும், ஆயுதப் பின்னணியையும் கொண்டு, மக்களை அடக்கி ஒடுக்கி காட்டு ராஜ்ஜியம் நடத்த எத்தனிக்கப்படுகின்றது. இந்த நிலையானது சட்டியிலிருந்து அடுப்பில் வீழ்ந்த கதையாகிவிட்டிருக்கிறது. மக்களையும், மக்கள் சேவகர்களையும், வன்முறையைப் பிரயோகித்து அடிமைப்படுத்த நினைக்கும் சக்திகளின் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஊடகச் செயலாளர்
சனி, 16 ஆகஸ்ட், 2008
ஈபிடிபி உறுப்பினரின் கொலை !

இவரது கொலை தொடராக பலதரப்பட்ட செய்திகள் வெளிவந்த போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளே இக் கொலையைச் செய்திருப்பதாக ஈபிடிபியினர் அவர்களின் "ஈபிடிபி நியூஸ்" ஊடகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். கிழக்கில் பிள்ளையான் குழுவுக்கும் ஈபிடிபிக்கும் தொடர் முறுகல் நிலை இருப்பதால் அதன் தொடர்ச்சியே இந்தக் கொலையாக இருக்கலாமென "நெருப்பு இணையத்தளம்" உறுதிப்படுத்தப்படாத செய்தியாக குறிப்பிடுள்ளது.
இவை அனைத்தையும் உற்று நோக்கும் போது ஏன் இப்படியான கொலைகள் தொடர்கின்றன, இதற்கு முற்றுப்புள்ளியே இல்லையா?
தமது கட்சி உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருக்கும் போது டக்ளஸ் தேவானந்தா தனது அரசியல் இருப்புக்காக உயிரைக் காவு கொள்ளும் அரசியல் வியாபாரம் செய்வத் துணிவது ஏன் என்பது தெரியாமல் உள்ளது.
கிழக்கின் கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்தினதும் பிள்ளையான் குழுவினதும் பொறுப்பில் இருக்கின்றது என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் அல்லது கிழக்கு மாகாண அரசு இக் கொலைதாரியை கைது செய்யாமைக்கான காரணம் என்ன?
இராணுவ சோதனைச் சாவடியில் இருந்து 200 மீற்றர் தூரத்திலே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் ஸ்ரீலங்கா படையினருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு குறைவே!
எது எப்படி இருப்பினும், தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்படியான தொடர் கொலைகளினால் எஞ்சப் போவது சுடலைகளும், மண்டையோடுகளுமே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)