இறுதி யுத்தத்தின் போது ஶ்ரீலங்கா படையிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் 367 பேர் நாளைய தீபாவளியை முன்னிட்டு இன்று 2011.10.25 ஆம் திகதி பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டார்கள்.
சமூகத்தில் இணைக்கப்படும் 30 வது இந் நிகழ்வானது வெள்ளவத்தை இராம கிருஸ்ண மண்டபத்தில் அதிதிகளாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்றோர் கலந்து கொள்ள புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் நடைபெற்றது.
தொழில் பயிற்சிகளான கட்டட வேலை, தச்சு, தையல், விவசாயம், மோட்டார் வாகன திருத்துநர், கணனி அறிவுத்திறன் மற்றும் கைப்பணி வேலைகள் போன்ற பல்துறை சார்ந்த தொழிற் பயிற்சிகளை விடுதலை பெறும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தேடலுக்கு:
1. முன்னாள் போராளிகள் விடுதலை - ஒலி
2. புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை சமூகத்தில் இணைக்கும் வைபவம்
3. முன்னாள் போராளிகள் 367 பேர் சமூகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.