பிரான்ஸ் நாட்டு பொருளாதார சட்ட விதிக்கமைய தபால் முத்திரைகளை தனி நபர்களும் கட்டளைகளைப் பெற்று பிரசுரம் செய்யலாம், இதற்கமைய தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலாளர் நாயகம் க.பத்மநாபா, தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் ஶ்ரீ சபாரெத்தினம் மற்றும் தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத் செயலதிபர் உமா மகேஸ்வரன் போன்றொரின் முகம் பதித்த தபால் முத்திரைகள் பிரான்ஸ் நாட்டில் ஈழ ஆதரவாளர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் முகம் பதித்த தபால் முத்திரையும் ஆதரவாளர்களினால் பதிப்பிக்கப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக பிரான்ஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அந் நாட்டுச் சட்ட விதிக்கு முரணாக இருப்பனால் நிதி வசூலிப்பு போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டது, இதனால் பணத்தினைத் திரட்ட முற்படும் விடுதலைப் புலிகளின் வியாபாரிகள் பிரபாகரனின் முத்திரைத் தலையினை பதிப்பித்து அதனூடாக தமிழீழ ஆதரவாளர்களிடம் பணம் வசூலிப்புக்கான முயற்சியினை மேற் கொண்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டு சட்ட விதிக்கமைய தபால் முத்திரைகளை பதிப்பித்து கொள்ள விரும்பும் நபர்கள் http://montimbramoi.laposte.fr எனும் இணையத்தளத்தின் ஊடாக தங்களுக்கு விரும்பிய செல்லப் பிராணிகளின் அல்லது விரும்பிய நபர்களின் படங்களை முத்திரையாக பதிப்பித்துக் கொள்ளலாம்.
முத்திரை வெளியீடு தொடர்பாக veera.vsv@hotmail.fr எனும் மின்னஞ்சலில் தமிழ் மூலமான மேலதிக தகவல்களைப் பெறலாம்.
மேலதிக தேடலுக்கு:
தேனீ இணையத்தளம்
பிபிசி - தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.