ஶ்ரீ லங்கா பாராளுமன்றத்தில் நேற்று 2011.12.13 ஆம் திகதி தகவல் ஊடகத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதம் இடம்பெற்ற போது உரையாற்றிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்காவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமன பாராளுமன்ற உறுப்பினர் சுமந்தினனுக்கும் காரசாரமான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
ஶ்ரீ லங்கா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இடையிலான கிரிக்கெட் ஆட்டம் கடந்த வாரம் இடம்பெற்றது, இதில் கலந்து கொள்வது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன, தமிழ் மக்கள் இன்னலில் வாடும் போது கிரிக்கெட் ஆட்டம் தேவையற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் குறிப்பிட்டு இருந்தும் அதே கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கிரிக்கெட் ஆட்டத்தில் கலந்து சிறப்பித்த விடயம் தொடர்பாகவும், மற்றும் அவர் பாராளுமன்றத்துக்கு மக்களின் ஆதரவின்றி பின் கதவால் எப்படி வந்தார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்கா தனது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டார்.
மேலதிக தேடலுக்கு :
தலைவருக்கு கண்ணாடியும் பைல் கவர்களையும் தூக்கிக் கொடுத்தவர் யார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.