நடிகர் முரளியின் மரணச் செய்தி கவலையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக பதிவு செய்யாமல் விட்ட களத்துமேட்டின் பக்கம் தலையை நீட்டுகிறேன்.
தற்போதைய தமிழக நடிகர்களினுள் தன்னைத் தானே சுயவிமரிசனம் செய்து கொள்ளுமளவுக்கு பக்குவமுள்ளவர் தான் நடிகர் முரளி. சென்ற வாரம் நடிகை லக்ஷ்மி விஜய் தொலைக்காட்சிக்காகத் தொகுத்தளிக்கும் "கதையல்ல நிஜம்" நிகழ்ச்சிக்கு நடிகர் முரளியும் அவர் மகன் அகர்வாவும் வந்து சிறப்பித்தனர், இந் நிகழ்ச்சியில் நடிகர் முரளி அருமையாக தனது உளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.
1964 வைகாசி 19 ஆம் திகதி பிறந்த முரளி 1984 ஆம் ஆண்டு சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரித்த பூவிலங்கு திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி புதுவசந்தம், இதயம், பொற்காலம், பகல் நிலவு, அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், சுந்தரா டிராவல்ஸ் உட்பட 99 திரைப்படங்கள் நடித்து பல இரசிகர்களினதும் பாராட்டைப் பெற்றவர், இறுதியாக தனையன் அதர்வா கதாநாயகனாக நடித்த சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரித்த காணா காத்தாடி திரைப்படத்தில் சிறு பாத்திரமேற்று நடித்திருந்தார், இதுவே இவரின் இறுதித் திரைப்படமாகும்.
இயக்குநர் பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்துக்காக, 2001 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றவர் முரளி.
தனது 46 வது வயதில் நூறாவது படத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகி நடிக்க முன்பாகவே இவ்வுலகத்தை விட்டு நடிகர் பிரிந்தது இரகசிகர்கட்கு துரதிஷ்டமே!
எனக்குப் பிடித்த நடிகரின் மறைவால் துயருறும் அன்னாரின் குடும்பத்துக்கும் இரசிகர்கட்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!
நடிகர் முரளியின் மரணம் எனக்கும் கவலையை ஏற்படுத்தியது!
பதிலளிநீக்குஅவரது இயற்கையான நடிப்பும் எளிமையும் என்றும் மறக்க முடியாதது!
அவரது மகனுக்கும் வாழ்க்கைத் தத்துவத்தை அற்புதமாக சொல்லித் தந்திருக்கிறார்.
பதிவுக்கு நன்றி - அவரது ஆத்ம சாந்திக்கு எமது பிரார்த்தனைகள்!
நன்றி தங்க முகுந்தன்
பதிலளிநீக்கு