யாழ் மாநகரசபையின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று 2011.12.13 ஆம் திகதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு மாநகர முதல்வர் தலைமையில் மாநகர மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அமர்வின் போது மாநகரசபை உறுப்பினர் மனுவல் மங்களநேசன் அநாகரீகமாக நடந்து கொண்டார், ஏனைய உறுப்பினர்களால் ஒழுங்குப் பிரச்சனை கோரிய போதிலும் ஒலிவாங்கியினால் அவர்களைத் தாக்க எத்தனித்ததுடன் கைவீச்சுடன் கூடிய அடாவடித்தனம் புரிந்தார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான மங்களநேசன் ஒழுங்காற்று நடவடிக்கை மூலம் அக் கட்சியினால் கடந்த வாரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.