பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகளுக்குள்ளே ஏற்பட்டுள்ள மோதல்களின் பிரதிபலிப்புகள் இப்போது கட்டணம் செலுத்திய ஊடக எச்சரிக்கை விளம்பரங்களாக பகிரங்கப்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது வியாபார நோக்குக்காகவே செயற்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் பிரிவினர் சொத்துக்களை எவ்வாறு கையகப்படுத்துவது தொடர்பாக தனித்தனியே ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர், அதன் ஒரு கட்டமாகவே லண்டனில் ஏற்பாடாகி இருந்த கடந்த மாவீரர் தின நிகழ்வுக்கான மண்டப அனுமதி இன்னொரு குழுவினரால் தடுக்கப்பட்டது, பண வசூலிப்பு தொடர்பாக குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தகராறே இதற்கான காரணமென விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
பதிவு செய்யப்பட்ட மண்டபத்துக்கான விளம்பரத்தினை மேற்கொண்ட GTV தொலைக்காட்சி தவறிழைத்ததாக கூறப்பட்டே சி. சந்திர மௌலீசன் என்பவரால் இவ் விளம்பரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக தேடலுக்காக கட்டண விளம்பர அறிவித்தலைப் பார்க்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.