ஶ்ரீ லங்கா பாராளுமன்றத்தில் கடந்த 2011.12.21 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்த போது எதிர்க் கட்சியினர் சுலோக அட்டைகளைத் தாங்கி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் அச் சுலோக அட்டைகளை ஆளும் தரப்பினர் பறிக்க முற்பட்ட போது சபையில் கைகலப்பு ஏற்பட்டது.
இக் கைகலப்பில் புத்தகங்கள் மற்றும் தண்ணீர்ப் போத்தல் வீச்சுக்களும் இடம்பெற்றன, இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். இதனால் ஜனாதிபதியில் வரவு செலவுத் திட்ட உரை 10 நிமிடங்கள் தடைப்பட்டது.
பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் கைகலப்புடன் கூடிய சர்ச்சை ஏற்பட்டதால் காணொளியின் ஒலி பாராளுமன்றத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தேடலுக்கு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.