இரகசிய தகவல் பரிமாற்றங்களை கண்டறிந்து, அதனை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக முன்னின்று உழைத்த விக்கிலீக்ஸ் இணையத் தளத்தினை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக அதன் நிறுவநர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வந்தமையினால் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் விக்கிலீக்ஸ் இணையத் தளத்தினை முடக்கிவிட அரும்பாடுபட்டன. இதன் ஒரு கட்டமாகவே நிறுவநர் ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவாகின.
அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் மாஸ்டர் கார்ட், விசா கார்ட் மற்றும் பேபால் போன்றவற்றின் ஊடாக செய்யப்படும் வங்கிப் பணப் பரிமாற்றங்களை தடை செய்துள்ளதனால் விக்கிலீக்ஸ் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியதால் தொடர்ந்து பயணிக்க முடியாமல் உள்ளதாக அதன் நிறுவநர் ஜூலியன் அசாஞ்சே இன்று 2011.10.25 ஆம் திகதி செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலதிக தேடலுக்கு:
விக்கிலீக்ஸ்
Wikileaks stops publishing over 'financial blockade'


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.