மேலைத்தேய நாடுகளில் வாழும் பிளவுபட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வியாபாரிகள் எதிர்வரும் புத்தாண்டு தினத்தில் இந்திய கலைஞர்களைக் கொணர்ந்து நிகழ்ச்சிகள் நடாத்துவதன் மூலம் தங்களது வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டத்தில் இறங்கி உள்ளனர். சுவிற்சர்லாந்து நாட்டில் "புத்தாண்டில் புது நிமிர்வு" எனும் தலைப்பில் ஒரு அணியும், "புதிய மகிழ்வு" எனும் தலைப்பில் இன்னொரு அணியினரும் கலை நிகழ்ச்சியினை புத்தாண்டு தினத்தில் நடாத்தவுள்ளனர்.
விடுதலைப் புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலைப் புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 29 டிசம்பர், 2011
சுவிஸில் விடுதலைப் புலி வியாபாரிகளின் கலை நிகழ்ச்சி - மக்கள் பீதியில்! - காணொளி
மேலைத்தேய நாடுகளில் வாழும் பிளவுபட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வியாபாரிகள் எதிர்வரும் புத்தாண்டு தினத்தில் இந்திய கலைஞர்களைக் கொணர்ந்து நிகழ்ச்சிகள் நடாத்துவதன் மூலம் தங்களது வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டத்தில் இறங்கி உள்ளனர். சுவிற்சர்லாந்து நாட்டில் "புத்தாண்டில் புது நிமிர்வு" எனும் தலைப்பில் ஒரு அணியும், "புதிய மகிழ்வு" எனும் தலைப்பில் இன்னொரு அணியினரும் கலை நிகழ்ச்சியினை புத்தாண்டு தினத்தில் நடாத்தவுள்ளனர்.செவ்வாய், 27 டிசம்பர், 2011
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக உறுப்பினரின் பாலியல் வக்கிரம் அம்பலம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் உதிரியாகிய சிலர் தமிழீழ மீட்பர்கள் தாமென தம்பட்டம் அடித்து சுயநல வாழ்வியலுக்கான பணமீட்டுதலை ஆரம்பித்துள்ளனர், விடுதலைப் போராளிகள் எனும் நாமத்தைப் பயன்படுத்தி மேலைத்தேய நாடுகளில் வாழும் தமிழர்களிடன் அனுதாபத்தை ஏற்படுத்தி அப்பாவிப் பெண்களிடன் பாலியல் வக்கிரங்களை நடாத்தி வருகின்றனர்.
சனி, 17 டிசம்பர், 2011
தமிழீழப் போராட்ட வியாபாரத்துக்கு மூலதனம் தாலிக்கொடி!
தமிழீழம் எனும் சொல்லை முதலீடாக்கி ஆங்காங்கே வியாபார உத்திகள் நடைபெற்று வருகின்றன, இதற்கு உதாரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் உதிரியாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தமிழீழ விடுதலை போராட்டம் எனும் பெயரில் சேர்த்த நிதியினையும், சொத்துக்களையும் தன் வசப்படுத்த பலத்த பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர், இதனாலேயே விடுதலைப் புலிகள் பல கூறுகளாகி ஆளுக்கு ஆள் துரோகியென்றும், மோசடிக்காரன் என்றும் பச்சோந்தியென்றும் சேறடிப்புக்களை நடாத்தி தமிழீழத்தின் பெயரால் சேர்த்த சொத்துக்களை தமக்கே உரிமையாக்கிக் கொள்கின்றனர்.
திங்கள், 12 டிசம்பர், 2011
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 46 பேர் விடுதலை. - காணொளி
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான 46 பேர் புனர்வாழ்வு பெற்று நேற்று 2011.12.11 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள், முள்ளிவாய்க்கால் அவலத்தினைத் தொடர்ந்து ஶ்ரீ லங்கா படையினரால் கைதான அல்லது சரணடைந்த 11 ஆயிரம் பேருக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர், புனர்வாழ்வுடன் கூடிய பயிற்சியினைப் பெற்றுவரும் எஞ்சியுள்ள 700 பேரும் 2012 ஆம் ஆண்டு விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஞாயிறு, 11 டிசம்பர், 2011
கட்டண விளம்பர எச்சரிக்கையுடன் விடுதலைப் புலிகளின் குழு நிலை மோதல்.
குறியீடு :
எச்சரிக்கை,
விடுதலைப் புலிகள்,
ஜீ ரீவி
வெள்ளி, 9 டிசம்பர், 2011
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக உறுப்பினரின் காமலீலை ஒலிப்பதிவுடன் அம்பலம்!
ஶ்ரீ லங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட தலைமைகள் அழிக்கப்பட, கைதானோர் சிறைச்சாலைகளிலும், புனர்வாழ்வு பெற்றோர் விடுதலையாகி பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர், இதற்கு விதிவிலக்காக எஞ்சியோர் சிலர் பல குழுக்களாகப் பிரிந்து மேற்கத்திய நாடுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கவுள்ளதாகக் கூறி நிதி வசூலிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.செவ்வாய், 6 டிசம்பர், 2011
வன்னி மக்கள் பட்டினிச்சாவு - போருக்கு சேர்த்த பணம் எங்கே? - ஒலி இணைப்பு
வன்னியில் ஶ்ரீ லங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உக்கிர மோதல் இடம்பெற்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காக புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் பலத்த பிரயத்தனங்களைச் செய்து வந்தார்கள், அந்தந்த நாட்டு அரசாங்கங்களை விடுதலைப் புலிகளின் பக்கத்துக்கு திரும்பிப் பார்க்கக் கூடியதாகவும், அத்துடன் அந் நாட்டு மக்களின் அனுதாபத்தை பெறவும் போராட்டங்களை தமிழீழ விடுதலை புலிகள் விரிவுபடுத்தி இருந்ததுடன் தமிழர்களிடம் பண வசூலிப்பையும் மேற்கொண்டனர்.
வியாழன், 17 நவம்பர், 2011
சமாதான உடன்படிக்கையின் தோல்வி "அமைதிக்கான அடமானங்கள்" - வீடியோ இணைப்பு
ஶ்ரீ லங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கை தோல்வி அடைந்தது தொடர்பாக கடந்த 2011.11.12 ஆம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் "அமைதிக்கான அடமானங்கள்" (Pawns of Peace) எனும் தலைப்பில் 208 பக்கங்களைக் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
ஞாயிறு, 13 நவம்பர், 2011
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அரசியலில் கத்துக்குட்டி - எரிக் சொல்ஹைம்.
2001 ஆம் ஆண்டு தொடக்கம் 10 தடவைகள் நோர்வே நாட்டின் சுற்றாடல் மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹைம் அவர்களைச் சந்தித்த தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியலில் கத்துக்குட்டியாக இருந்து வந்தாரென இந்திய செய்தி ஊடகமான ஐ ஏ என் எஸ் இற்கு எரிக் சொல்ஹைம் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
வியாழன், 3 நவம்பர், 2011
விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியின் செவ்வி. - காணொளி
ஶ்ரீ லங்காவில் இடம்பெற்ற விடுதலை புலிகள் மீதான யுத்தம் தொடர்பாக "Freedom Speaks"எனும் ஆவண திரைப்படம் அண்மையில் கொழும்பில் அங்குராப்பணம் செய்யப்பட்டது, அந் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை "அததெரண தமிழ்" இணையத் தளம் சந்தித்தது, அவர்களுள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டாயத்தின் பேரில் இணைக்கப்பட்ட புதுக்குடியிருப்பைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளி விஸ்வநாதன் நிரோசா என்பவரை செவ்வி கண்ட போது தெரிவித்த கருத்துக்கள் காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது.
சனி, 29 அக்டோபர், 2011
விடுதலைப் புலிகளின் தமிழ் இளையோர் அமைப்பின் கட்டமைப்பு - நவரெத்தினம் பிரபாகரன்
செவ்வாய், 25 அக்டோபர், 2011
விடுதலைப் புலிகள் 367 பேருக்கு தீபாவளியை முன்னிட்டு விடுதலை!
புதன், 12 அக்டோபர், 2011
விடுதலைப் புலிகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட கவிஞை செல்விக்கு நினைவேந்தல்.
சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் நாவலாசிரியர்களின் கூட்டமைப்பான PEN அமைப்பினரால் (Poets Essayists and Novelists) உலகப் புகழ்பெற்ற கவிதைக்கான சர்வதேச விருது (Poetry International Award) பெற்ற செல்வி எனப்படும் சேமமடுவைச் சேர்ந்த செல்வநிதி தியாகராசா 1991.08.30 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதையின் பின்னர் கொல்லப்பட்டார்.
குறியீடு :
கவிஞை செல்வி,
நினைவேந்தல்,
படுகொலை,
விடுதலைப் புலிகள்
வியாழன், 29 செப்டம்பர், 2011
ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி! - துக்ளக் சஞ்சிகை
இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்திட்டங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனைக் கைதிகளாகவுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ராஜீவ்காந்தி படுகொலையில் என்ன பங்கு வகித்தார்கள் என்பது தொடர்பாக 2011.09.29ஆம் திகதி வெளிவந்த "துக்ளக்" சஞ்சிகையில் எஸ்.புஸ்பவனம் "ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி!" எனும் தலைப்பில் கட்டுரையைப் பதிவு செய்துள்ளார்.
குறியீடு :
துக்ளக்,
ராஜீவ் கொலை,
விடுதலைப் புலிகள்
சனி, 10 செப்டம்பர், 2011
விடுதலைப் புலிகளிடமிருந்து வை.கோ நிதி பெற்றார் - விக்கிலீக்ஸ்
ஞாயிறு, 4 செப்டம்பர், 2011
முன்னாள் போராளிகளின் பெயரில் ஊடக விபச்சாரம் - காணொளி இணைப்பு
சனி, 13 ஆகஸ்ட், 2011
விடுதலை பெற்ற 152 முன்னாள் விடுதலைப் புலிகள்! - காணொளி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக முள்ளிவாய்க்காலில் காவு கொடுக்கத் தயாராக இருந்த பல்லாயிரம் பேரில் இருந்து மீண்டு, ஸ்ரீலங்கா படையிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11000 பேரில் புனர்வாழ்வு பெற்ற 152 பேர் நேற்று 2011.08.12 ஆம் திகதி புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவினால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறியீடு :
புனர்வாழ்வு,
விடுதலைப் புலிகள்,
ஸ்ரீலங்கா
வியாழன், 11 ஆகஸ்ட், 2011
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் விடுதலைப் புலிகளால் கற்றல் மறுக்கப்பட்ட முன்னாள் போராளிகள் (காணொளி)
தமிழீழ விடுதலைப் புலிகளால் கற்றல் மறுக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 185 பேர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றார்கள்.
வியாழன், 4 ஆகஸ்ட், 2011
சனல் 4 வீடியோ காணொளிக்கு மறுப்புக் கூறும் ஸ்ரீலங்கா வீடியோ காணொளி!
திங்கள், 1 ஆகஸ்ட், 2011
மனிதாபிமான நடவடிக்கையென சர்வதேசத்தின் சோற்றினுள் பூசனிக்காயை புதைக்க முற்படும் கோத்தபாய!
தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவிலாறு அணைக்கட்டு பூட்டப்பட்ட 2006 ஜூலை தொடக்கம் 2009 மே முள்ளிவாய்க்கால் வரையான காலப் பகுதியில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட “மனிதாபிமான நடவடிக்கை தொடர்பான உண்மை விபர ஆய்வு” எனும் தொனிப் பொருளில் இன்று ஓகஸ்ட் - 01ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் சர்வதேசத்துக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


































![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)