ஈழத்தின் பாடகர்களாக பலர் இருந்த போதிலும், சிலரே பிரபல்யம் பெற்று விளங்கினர், அவர்களிலும் மிகச்சொற்பமானவர்களே இன்றும் நிலைத்து நிற்கின்றார்கள், அந்த வரிசையில் நூற்றுக் கணக்கான போர்க் கால எழுர்ச்சிப் பாடல்களைப் பாடி மக்களின் மனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியப் பாடகர்களாக இடம் பிடித்துக் கொண்ட சார்ந்தன் மற்றும் சுகுமார் போன்றவர்கள் முக்கியமானவர்களாவர்.
ஈழத்துப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் மகன் கோகுலன் இப்போது சிங்கள பாடல்களைப் பாடுவதுடன் படங்களிலும் நடித்து வருகின்றார், அண்மையில் அவர் நடித்து வெளிவந்த "செல்வம்" எனும் சிங்கள திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
வன்னி யுத்தத்தில் சிக்குண்டு படையினரிடம் சரணடைந்தவர்களுள் சாந்தனும் ஒருவர், புனர்வாழ்வு பெற்று விடுதலையான பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருவதுடன் அமைச்சரின் புகழைப் பாடலாகவும் பாடியிருந்தார்.
1972 ஆம் ஆண்டு கொழும்பு கதிரேசன் வீதியில் கலைப் பயணத்தை ஆரம்பித்த எஸ்.ஜி.சாந்தன் 1977 ஆம் ஆண்டு கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தார், கூடவே இசை ஞானத்தையும் கொண்டிருந்ததால் 1981 ஆம் ஆண்டு கண்ணன் இசைக் குழுவுடன் இசைந்து பாடல்களைப் பாடினாலும் அவ் இசைக் குழு நீண்ட ஆயுளைப் பெறாததால் 1982 ஆம் ஆண்டில் சாந்தன் இசைக் குழுவெனும் தனது பெயரிலேயே இசைக் குழுவை அமைத்து இசைக் கச்சேரிகளை நடாத்தி வந்தார்.
தேச விடுதலைப் போராட்டத்தில் கலைஞர்களின் பங்கு காத்திரமானது, ஆதலால் சாந்தனையும் ஈழ விடுதலைப் போராட்டம் ஆட்கொண்டதில் வியப்பில்லை, இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டக் களத்துக்கு தனது புதல்வர்களான கானகன் மற்றும் இசையரசன் இருவரையும் அர்ப்பணித்தவர் ஈழத்துப் பாடகர் சாந்தன்.
தந்தையைப் போல் தனையன்களான இசையரசனும், கோகுலனும் பாடல்களைப் பாடக் கூடியவர்களே, இப்போது கோகுலன் பாடகராகப் பரிணாமம் பெற்று பாடல்களைப் பாடி வருகின்றார், தேச ஒற்றுமைக்காக சிங்கள பாடல்களைப் பாடுவதுடன் "செல்வம்" எனும் சிங்கள படத்திலும் நடித்துள்ளார், இலைமறை காயாக இருந்த ஈழத்துப் படைப்பாளிகளின் புகழ் உலகமெல்லாம் பரவட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.