மேலைத்தேய நாடுகளில் வாழும் பிளவுபட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வியாபாரிகள் எதிர்வரும் புத்தாண்டு தினத்தில் இந்திய கலைஞர்களைக் கொணர்ந்து நிகழ்ச்சிகள் நடாத்துவதன் மூலம் தங்களது வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டத்தில் இறங்கி உள்ளனர். சுவிற்சர்லாந்து நாட்டில் "புத்தாண்டில் புது நிமிர்வு" எனும் தலைப்பில் ஒரு அணியும், "புதிய மகிழ்வு" எனும் தலைப்பில் இன்னொரு அணியினரும் கலை நிகழ்ச்சியினை புத்தாண்டு தினத்தில் நடாத்தவுள்ளனர்.
வருமானமீட்டுவதற்காக நடாத்தும் இந்த கலை நிகழ்ச்சி எனும் வியாபாரத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளினால் ஆங்காங்கே ஒரு குழுவை இன்னொரு குழு திட்டித் தீர்ப்பதனையும், வன்முறையில் ஈடுபடுவதனையும் காணக் கூடியதாகவுள்ளது.
இதனால் எதிர்வரும் முதலாம் திகதி விபரீதம் ஏதும் ஏற்படலாமென சுவிஸ் காவற்துறை எதிர்பார்ப்பதாகவும், இதனைத் தடுப்பதற்காக முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த மாவீரர் தினத்திலும் இரண்டு குழுக்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் கலந்து கொண்ட மக்கள் பீதியடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிசில் தமிழக நடிகர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியும் நெடியவன் குழு பரப்பிய வதந்தியும் - வானொலி நிகழ்ச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.