தமிழீழ விடுதலைப் புலிகளால்
வருடாந்தம் நவம்பர் 27 ஆம் திகதி அனுட்டிக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள், 2009 ஆம்
ஆண்டு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை முற்றுப் பெற்றதாக
அறிவிக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் முக்கியத்தர்கள் அரச படைகளிடம் சரணடைந்ததைத்
தொடர்ந்து விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் முடிவடைந்தன, ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில்
வாழும் விடுதலைப் புலிகள் இம்முறை மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு செய்துள்ள
போதிலும் சிறு சிறு பிரிவுகளாகவுள்ள அணிகள் ஒன்றுக்கொன்று மோதலில் ஈடுபட்டுள்ளதால்
நிகழ்வு தடைப்படும் நிலையை எட்டியுள்ளது.
மாவீரர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாவீரர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 20 நவம்பர், 2011
சனி, 15 நவம்பர், 2008
கண்டாவளையில் மாவீரர் தின முன்னேற்பாடு!
வன்னி - கண்டாவளைக் கோட்டத்தில் கடந்த 2008.11.13 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.சி.சீராளன் ஏற்பாட்டில் கண்டாவளைக் கோட்ட மாவீரர் செயற்பாட்டுக்குழுச் செயலாளர் திரு.செ.புஸ்பராஜா தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவு கூரும் முன்னோடிக் கலந்துரையாடல் நடைபெற்றது.இந் நிகழ்வுக்குப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினர், வட்டப் பொறுப்பாளர்கள், வர்த்தக சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், மாவீரர் செயற்பாட்டுக் குழுவினர் மற்றும் தேசிய போரெழுச்சிக் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.
மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளித்தல், மாவீரர் துயிலுமில்லம், பொது இடங்கள் போன்றவற்றில் சிரமதானப்பணிகளை மேற்கொள்ளல், குருதிக்கொடை வழங்கல், களமுனைப் போராளிகளுக்கு உலருணவு வழங்கல், வீதிகளில் மாவீரர் நினைவுப் பதாகைகளை அமைத்தல் மற்றும் இறுதிநாளில் மாவீரர் தினத்தை எழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
குறியீடு :
மாவீரர் தினம்,
வன்னி,
விடுதலைப் புலிகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)