"கோத்தாவின் பிரதமர் கனவு தவிடு பொடியானது! மனோவின் கட்சி ஆட்சியைத் தீர்மானிக்கும்!" எனும் தலைப்பில் நேற்று களத்துமேடு பதிவு செய்த கட்டுரையை அனுமதியின்றி "எழு தமிழா" எனும் இணையத் தளம் பதிவேற்றம் செய்துள்ளமை கண்டனத்துக்கு உரியது. வலைப் பதிவர்களின் ஆக்கங்களை அனுமதியின்றி மீள் பதிவேற்றம் செய்வதானது ஊடக விபச்சாரத்துக்கு ஒப்பானதாகும், இல்லையேல் குறைந்தபட்சம் ஆக்கத்தின் இறுதியில் பெறப்பட்ட தளத்தினை நன்றியுடன் அடிக் குறிப்பில் காட்ட வேண்டியது ஊடக தர்மமாகும்.
சொந்த ஆக்கத்தினை பதிவேற்றம் செய்வது போன்று வலைப் பதிவர்களின் ஆக்கங்களை திருடி பதிவேற்றம் செய்து வாசகர் எண்ணிக்கையை அதிகரிப்பதால் தளத்தின் நன் மதிப்பு அதிகரிக்கும் என "எழு தமிழா" இணையம் நினைப்பது தவறாகும், எழு தமிழா போன்ற இணையத் தளங்களுக்கு முதலில் வரும் வாசகர்கள் வலைப் பதிவுக்குப் செல்லும் போது "எழு தமிழா" போன்ற இணையத் தளங்களில் இருந்தே வலைப் பதிவர்கள் திருடி எடுக்கிறார்கள் என எண்ணக் கூடும், ஆகவே ஊடக திருட்டு வரவேற்புடையதல்ல.
இந்தப் பதிவு எழுதுவதற்கு 8 மணித்தியாலத்துக்கு முன்பாக எழு தமிழா வுக்கு மின்னஞ்சல் மூலம் எனது கண்டனத்தைத் தெரிவித்து அடி குறிப்புடன் கூடிய எனது தளத்தின் பெயரை பதிவிடுமாறு கோரியிருந்தேன், ஆனால் "கோத்தாவின் பிரதமர் கனவு தவிடு பொடியானது! மனோவின் கட்சி ஆட்சியைத் தீர்மானிக்கும்!" எனும் தலைப்பில் பதிவேற்றியிருந்த கட்டுரையின் தலைப்பினை "மனோவின் மாநகரசபை வெற்றியால் கோத்தாவின் பிரதமர் கனவு தவிடு பொடி" என மாற்றம் செய்து கட்டுரையை அப்படியே சொந்த கட்டுரை போன்று பதிவேற்றம் செய்துள்ளமையே இந்த பதிவு இட வேண்டியதன் அவசியமாகும்.
ஆக்கங்களை தயாரிக்க முடியாமல் வலைப் பதிவர்களின் தயவில் ஊடகம் நடாத்தும் எழு தமிழா போன்ற இணையத் தளங்கள் ஊடக தர்மத்தினை பேண முடியா விட்டால் எதற்காக ஊடகம் எனும் போர்வையில் விபச்சாரம் செய்ய வேண்டும், வேறு வேலைகளைக் கவனிக்கலாமே!
ivarkal en pathivaiyum thirudi irukkiraarkal. Ithu patri netru naanum oru pathivu pottirukkiren
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ரஹீம் கஸாலி.
பதிலளிநீக்குஊடக விபச்சாரிகளை அம்பலப்படுத்த வேண்டும், தமிழனை துணைக்கு அழைத்துக் கொண்டு செய்யும் பதிவுத் திருட்டுகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
உண்மையில் இந்த விடயத்தில அனைத்து பதிவர்களும் ஒருமித்து குரல் கொடுக்க தயங்குவதன் அர்த்தம் தெரியவில்லை.
பதிலளிநீக்குஇதே தளம் பணம் கொடுத்துத் தான் விளம்பரங்கள் செய்து வருகிறது சகோதரா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்
வருகைக்கு நன்றி சோதரன் சுதா,
பதிலளிநீக்குவருமானம் ஈட்டுவதற்கும், வாசகர் வருகையை அதிகரிப்பதற்கும் தமிழ்ப் பதிவர்களின் குரல்வளையை நெரிக்க முற்படும் இவ்வாறான இணையங்களை எல்லோரும் சேர்ந்து அம்பலப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.