வளர்ந்து வரும் பாடகர்களை ஊக்குவித்து முன்னணிக்கு கொண்டு வரும் விஜய் தொலைக்காட்சியின் அனேகமான நிகழ்ச்சிகள் சமூக முற்போக்கு திறன் வாய்ந்தவை, என்றாலும் அனேக நிகழ்ச்சிகளில் தமிங்கில ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகின்றன.
தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் உயர்திணை, அஃறிணை, ஒருமை, பன்மை போன்ற இலக்கண பண்புகளுடன் வேறெந்த மொழிகளிலும் இல்லாத சிறப்பம்சங்கள் பல உள்ளன, அவற்றில் தனி மனிதனையே பன்மையில் (நீ - நீங்கள்) விழிக்கும் பண்பு சிறப்பானது, இந்த தமிழின் பண்பாட்டுச் சிறப்பியல்பினை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கடைப்பிடிக்காமை வரவேற்கத்தக்கதல்ல.
அத்துடன் நாகரீகமாக தமிழினைப் பேசாமல் தொகுப்பாளர்கள் நடத்தும் அரட்டை அருவருப்பாகவுள்ளது, இதனை விஜய் தொலைக்காட்சி கவனத்தில் எடுத்தால் சிறப்பாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.