தமிழீழ விடுதலைப் புலிகளால்
வருடாந்தம் நவம்பர் 27 ஆம் திகதி அனுட்டிக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள், 2009 ஆம்
ஆண்டு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை முற்றுப் பெற்றதாக
அறிவிக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் முக்கியத்தர்கள் அரச படைகளிடம் சரணடைந்ததைத்
தொடர்ந்து விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் முடிவடைந்தன, ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில்
வாழும் விடுதலைப் புலிகள் இம்முறை மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு செய்துள்ள
போதிலும் சிறு சிறு பிரிவுகளாகவுள்ள அணிகள் ஒன்றுக்கொன்று மோதலில் ஈடுபட்டுள்ளதால்
நிகழ்வு தடைப்படும் நிலையை எட்டியுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைமைச்
செயலகம் லண்டன் எக்சல் மண்டபத்தில் மாவீரர் தினத்தினை நடாத்துவதற்கான ஏற்பாடுகளுடன்
மண்டப முன்பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் நெடியவனின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
இடைஞ்சல் ஏற்படுத்தியதைத்
தொடர்ந்து மண்டப முன்பதிவு இரத்துச் செய்யப்பட்டு முற்பணம் மீண்டும் உரியவர்களிடம்
வழங்கப்பட்டுள்ளது.
ஏட்டிக்குப் போட்டியான
செயற்பட்டு வரும் இந்த இரு அணிகளின் செயற்பாட்டினால் ஹரோவில் ஏற்பாடாகி இருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீர்ர் தின நிகழ்ச்சிக்கான மண்டபமும்
இரத்துச் செய்யப்பட்டுள்ளது, லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஐந்து
இடங்களை தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாவீரர் தின நிகழ்வின்
மூலம் அதிக பணத்தினை வசூலிப்பவர்கள் யார் எனும் போட்டியே இப்போது ஆதிக்கம் செலுத்தியுள்ளதால்
இரு அணிகளும் மோதலில் ஈடுபடக் கூடிய வாய்ப்பே அதிகம் இருப்பதால் மக்கள் பலர் கலந்து
கொள்ள மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது, இதனால் லண்டனில் மாவீரர் தின நிகழ்வுகள்
கேள்விக் குறியாகி உள்ளன.
மேலதிக தேடலுக்கு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.