தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 அக்டோபர், 2011

கோத்தாவின் பிரதமர் கனவு தவிடு பொடியானது! மனோவின் கட்சி ஆட்சியைத் தீர்மானிக்கும்!


நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிக உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றிய போதிலும், கொழும்பு மாநகரசபையின் 24 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ளது.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ததேகூ அரசியல் பெட்டிக்கடை கல்முனை நோக்கி நகர்வு!


தேர்தல் காலம் வந்தால் மாத்திரம் மூட்டை முடிச்சுகளுடன் பரிவாரங்களையும் அழைத்துக் கொண்டு பிரசாரங்களுக்காக தேர்தல் கடை நடத்துபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பது இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் தெரிந்த விடயமாகும்.

செவ்வாய், 19 ஜூலை, 2011

கைப்பற்றிய பிரதேசசபைகளில் ததேகூ செய்த அபிவிருத்திகள் என்ன?


ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குக் கோரும் அறிக்கையினை பாட்டனின் பேரால் தந்தை வழியாக அரசியல்வாதியாக உள்நுழைந்த சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ளார்.

சனி, 16 ஜூலை, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் போலி முகத்திரையை அம்பலமாக்கவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்


ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி இருப்பதனால், அந்தந்த பிரதேசங்களில் போட்டியிடும் அரசியற்கட்சிகள் மிகவும் சுறுசுறுப்பாக அரசியல் வேட்டையில் இறங்கி மக்களிடம் வாக்குகளை பெற முயன்று வருகின்றார்கள்.

செவ்வாய், 12 ஜூலை, 2011

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2011 ஜூலை 23

எதிர்வரும் 2011. 07.23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஒத்திவைக்கப்பட்ட 65 சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.  அபேட்சகர்கள் வாக்கு வேட்டைக்கு வீடு வீடாகச் சென்று கட்சி சார்ந்த கொள்கைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வெள்ளி, 13 மே, 2011

தமிழக சட்டமன்ற தேர்தலில் கருணாநிதிக்கு நாமமிட்டார் ஜெயலலிதா


இந்தியாவில் கடந்த மாதம் இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில் செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக கூட்டணியினர் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்பட்ட தமிழ்க் கட்சிகள் !

யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன, இதில் ஈபிடிபி சார்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று மேயரை தன்னகத்தே வசப்படுத்திக் கொண்டது.

வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று நகரசபைத் தலைமைத்துவத்தைக் கைப்பற்றியுள்ளது, ஐனநாயக மக்கள் முன்னணி இன்னும் மேலதிகமாக 144 வாக்குகளைப் பெற்றிருப்பின் நகரசபைத் தலைமைத்துவம் புளொட் வசமாகியிருக்கும்.

எது எப்படி இருப்பினும் இதுவரை 22 பாராளுமன்ற ஆசனங்களை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு நன்மை பயக்கும் எவ்வித சேவைகளும் இன்று வரை செய்யவில்லை, மாறாக சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாஸிச நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஈழப் போராளிகளெனும் அங்கீகாரம் தேடும் முயற்சியிலேயே ஈடுபட்டு வந்தது.

விடுதலைப்புலிகளினால் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டு யுத்தக் கவசங்களாகப் பாவிக்கப்பட்ட பல இலட்ச அப்பாவி மக்களை விடுதலைப் புலிகளெனவும், புலிகளை நேசிப்பவர்களெனவும் சர்வதேசரீதியில் பொய்ப் பிரசாரம் செய்து சமுதாயத்தில் ஊனமுற்றவர்களாகவும், வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களை அகதி முகாமில் முடக்குவதற்கும் காரணமாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு மீண்டும் வவுனியா நகர மட்டத்தில் ஆட்சியதிகாரம் வழங்க மக்கள் முனைந்திருப்பது தீக்குள் விரலை வைப்பதற்கு ஒப்பானது.

இன்னும் எத்தனை ஆயிரம் மக்களைப் பலி எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காத்திருக்கின்றார்களோ தெரியாது, அதற்கான அங்கீகாரத்தினை வவுனியா மக்கள் கொடுத்துள்ளார்கள், இனி வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சந்தற்பவாதக் கொள்கையினால் தமிழினம் பூண்டோடு அழிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.

மக்களின் பிரதிநிதிகளென தொடர் பிரசாரம் செய்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்தில் தூக்கியெறியப்பட்டு இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர், விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடனும், அவர்களின் கள்ள வாக்குகளாலும் பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிராமங்களுக்கே உரித்தான உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி கொள்ள முடியாமல் தள்ளாடி நிற்பது வெளிச்சமாகின்றது.

தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி எனும் நாமத்துடன் செயற்பட்டு வரும் "கடிதம் புகழ்"
வீரசிங்கம் ஆனந்தசங்கரி நடந்து முடிந்த தேர்தலில் அவமானத்தைச் சந்தித்துள்ளார், வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை நழுவவிட்டதுடன், யாழ்ப்பாண மாநகர சபையில் தன்னைச் சார்ந்தவர்களுக்கே ஆட்சியதிகாரம் கிடைக்குமெனக் கனவு கண்டிருந்தார், பிற்போக்குத்தனமும், சுயநலமும் இவருடனே குடிகொண்டிருப்பதனால் உள்ளூராட்சித் தேர்தலிலேயே இவரது கூட்டுக் கட்சி தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது, இதில் வீ.ஆனந்தசங்கரிக்குக் கிடைத்த விருப்பு வாக்குக்கள் 424 மாத்திரமே, இந்த இலட்சணத்தில் அரசியல்வாதியெனும் நாமத்துடன் இன்னும் தமிழர்களை ஏமாற்றத் தான் வேண்டுமா!

சனி, 8 ஆகஸ்ட், 2009

யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தல் முடிவு - 2009


மொத்த வாக்குகள் - 100417
அளிக்கப்பட்ட வாக்குகள் - 20922
நிராகரிக்கப்பட்டவை - 1358

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் - 10602, ஆசனங்கள் 11+2 = 13 (போனஸ் அடங்கலாக)
இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குகள் - 8008, ஆசனங்கள் - 8
சுயேச்சைக் குழு - 1 வாக்குகள் - 1175, ஆசனம் - 1
தமிழர் விடுதலைக் கூட்டணி வாக்குகள் - 1007, ஆசனம் - 1

வவுனியா நகர சபைத் தேர்தல் முடிவு - 2009



வவுனியா நகர சபைத் தேர்தல் முடிவுகள் 2009

மொத்த வாக்குகள் 12292
அளிக்கப்பட்ட வாக்குகள் 120850
நிராகரிக்கப்பட்டவை 558

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குகள் - 4279, ஆசனங்கள் - 3 + 2 = 5 (போனஸ் அடங்கலாக)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வாக்குகள் - 4136, ஆசனங்கள் - 3
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் - 3045, ஆசனங்கள் - 2
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் - 587, ஆசனம் - 1

தேர்தல் முடிவுகள் - 2009

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைக்கான தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது, மாலை 6 மணிக்குப் பின்னராக வாக்குகள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுக் கொண்டிருகின்றன, சில இடங்களுக்கான தபால் மூல வாக்குகளின் பெறுபேறுகள் ஸ்ரீலங்கா ஊடகங்களின் மூலமாக உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

தேர்தலின் பெறுபேறுகளை ஸ்ரீலங்கா தேர்தல் திணைக்கள இணையத் தளத்தில் அறியக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியா நகரசபைத் தேர்தல் முடிவு

மொத்த வாக்குகள் 12292
அளிக்கப்பட்ட வாக்குகள் 120850
நிராகரிக்கப்பட்டவை 558

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குகள் - 4279, ஆசனங்கள் - 3 + 2 (போனஸ் அடங்கலாக)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வாக்குகள் - 4136, ஆசனங்கள் - 3
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் - 3045, ஆசனங்கள் - 2
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் - 587, ஆசனம் - 1




ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

மாநகர சபைத் தேர்தலும் மக்களால் தூக்கி வீசப்பட்ட கூட்டமைப்பினரும் !

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைத் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ள இந்த நேரத்தில் அரசியல்வாதிகளும் வாக்குக்கோர வீடு வீடாக வீதி வீதியாக நடந்து வருகின்றார்கள்.

அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவும் அவர்சார் கட்சி உறுப்பினர்களும் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முகமிழந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கு வாக்குத் தேடி வருகின்றனர், அவ்வாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், நாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி இணைந்து தர்மலிங்கம் சித்தார்த்தன், திருநாவுக்கரசு ஸ்ரீதரன், வீரசிங்கம் ஆனந்தசங்கரி போன்றோர் தம் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்தும், இலங்கை தமிழரசுக் கட்சிக்காக சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரும் மக்களிடம் வாக்குத் தேடுவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தப் பிரதேசங்களில் இவ் அரசியல்வாதிகளுக்கென வாக்குவங்கி இல்லாமையே இவர்களின் தீவிர வாக்கு வேட்டைக்குக் காரணமாகும், கடந்த காலங்களில் மக்களுக்குச் சேவைகள் எதுவும் செய்யாமல், தேர்தல் முடிந்ததும் மக்களை மறந்து விடும் இவ் அரசியல்வாதிகளை மக்கள் திரும்பிப் பார்க்க மறுக்கின்றனர்.

மக்களை மறந்து விட்டவர்களில் முக்கியமானவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியெனப் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரானராகும், போட்டி அரசியலில் டக்ளஸ் தேவானந்தா இருக்கும் வரை பாராளுமன்ற ஆசனம் கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோர்கள் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் தூக்கிப் பிடித்தாலே உயிர்ப்பிச்சையும் அவர்களின் ஆசீர்வாதத்துடன் கூடிய வெற்றி வாய்ப்பும் கிடைக்கும் என்பதால் கூட்டமைப்பென நாமமிட்டு ஒன்று சேர்ந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளெனும் ஏகப் பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விடுதலைப் புலிகள் செல்லப்பிள்ளைகளாகப் பார்த்தனர், தேர்தல் வந்தது கள்ள வாக்குகள் மூலம் வாக்குப் பெட்டிகள் நிரப்பப்பட்டன, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர், மேற்சொல்லப்பட்டோர் கண்ட கனவு நிறைவெய்தியது.

வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கான சேவை எதனையும் செய்யவில்லை, மாறாக உயிர்ப்பிச்சையும் பாராளுமன்ற ஆசனத்தையும் பெற்றுக் கொடுத்த விடுதலைப் புலிகளைத் துதி பாடுவதிலும் அவர்கள் செய்யும் கொலைக் கலாசாரத்தை நியாயப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வந்தனர்.

திருகோணமலையில் இருக்கும் மாவிலாறு அணைக்கட்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் பூட்டப்பட்ட கணத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் இலட்சியத்தில் இருந்த தமிழீழம் சுருங்கத் தொடங்கியது, முற்போக்குச் சிந்தனையைக் கொண்டிராத புலித் தலைமையும் இதனை ஏறெடுத்துப் பாராமல் போரியலில் நாட்டம் கொண்டனர், அதன் விளைவு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஊனத்துடனும், மனநோயுடனும் உறவுகளை இழந்து அகதிகளாக வாழ்கின்றனர், பலரைப் பலி கொடுத்ததால் கிடைத்த பரிசும், படித்த பாடமும் இது தான்.

இன்னும் எமக்கு போர் எண்ணம் தேவையா, எம்மை நாம் இன்னும் இழக்கத் தயாரா எனும் கேள்விகள் இன்னும் மீளாய்வு செய்யப்படாமலே தொக்கி நிற்கின்றன.

பல இலட்சக் கணக்கான மக்கள் வன்னிப் போர் முனையில் விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கி அவதியுறும் போது உலகமே அழுதது, விடுதலைப் புலிகளின் பிடியில் உள்ள மக்களை விடுவிக்குமாறு சர்வதேசமும் கேட்டுக் கொண்டது, ஆனால் விடுதலைப் புலிகளும், அவர்களின் பிரசாரப் பீரங்கிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அம் மக்களின் உயிர்களைப் பற்றி எந்தவித அக்கறையும் இன்றி அவர்கள் விடுதலைப் புலிகளை நேசிப்பவர்கள், புலிகளை விட்டு வர விரும்பாதவர்கள் என்றெல்லாம் கதை கூறித் திரிந்ததை எவரும் மறக்க முடியாது.

சம்பிரதாயத்துக்கேனும் "விடுதலைப் புலிகளே போர் முனையில் தடுத்து வைத்திருக்கும் அப்பாவி மக்களை விடுவியுங்கள்" என ஓர் அறிக்கை விடத் திராணியற்று புலிகள் செய்வதே சரியென வியாக்கியானம் செய்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகும், அந்த வகையில் வன்னியில் நிர்க்கதியாகி நின்று கொல்லப்பட்ட எண்ணற்ற மக்களின் இறப்புக்கும், அகதி முகாம்களில் உறவுகளை இழந்து ஊனமுற்று மனநோயாளிகளாக எம் மக்கள் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் காரணமானவர்கள்.

இப்படியான சுயநலவாதப் போக்குடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் தமிழர்களின் ஒற்றுமை பற்றிக் கருத்துக் கூற அருகதை உடையவர்களா?, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் உரிமையையும் நேர்மையுடன் வென்றெடுக்கக்கூடிய தமிழர்களின் சக்தியாய் தமிழர்களின் மாபெரும் பலமாய் இருக்கக்கூடிய ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு என அறிக்கை விடுகின்றார்கள், இப்படிக் கூற இவர்களுக்கு வெட்கம் இல்லையா, இன்னும் தமிழினம் மௌனிக்க முடியாது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கை இவர்களைக் கேள்வி கேட்க வைக்கின்றது, இதனாலேயே இவர்களின் போலி முகங்களை அம்பலப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தையடுத்து இலங்கை வந்த இந்திய அமைதி காக்கும் படையுடன் இணைந்து செல்வம் அடைக்கலநாதன் சார்ந்த தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் மக்களுக்குச் செய்த கொடுமைகள் எண்ணற்றவை அதில் பாடசாலை சென்ற மாணவர்கள் முதல் வீதியில் நின்ற வாலிபர்கள் வரை பலோத்காரமாக பிடித்துச் சென்று தமிழ்த் தேசிய இராணுவம் எனும் பேரில் ஆயுதப் பயிற்சி கொடுத்து புலிகளுக்கெதிராக போராடத் தூண்டி விட்டமை முதன்மையானதாகும்,
இந்திய இராணுவம் இந்தியா திரும்பிய போது அவர்களுடனே சேர்ந்து ஓடியோருள் செல்வம் அடைக்கலநாதன் சார்பு இயக்கத்தினரும், சுரேஸ் பிரேமச்சந்திரன் சார்பு இயக்கத்தினரும் முக்கியமானவர்கள்.

இந்தியாவில் சிலகாலம் அஞ்ஞாதவாசம் செய்து விட்டு ஸ்ரீலங்கா திரும்பி சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து துணைப்படையெனும் பெயரில் பாதுகாப்பு அமைச்சினால் கொடுக்கப்பட்ட பணத்தினையும், பாதுகாப்பையும் பெற்று கொழும்பில் அலுவலகம் அமைத்து அரச புலனாய்வாளர்களாக செயற்பட்டவர்கள் இவர்களே!, கொழும்பிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் இவர்களால் கைதாகி காணாமற் போனோர் அதிகம் பேர்.

அரசாங்கத்திற்குத் துணைபோனமைக்காகவே இவர்களுக்கு பாராளுமன்ற ஆசனம் இல்லாத போதிலும் ஜனாதிபதி சந்திரிக்காவினால் சில திணைக்களங்களுக்கு ஆலோசகர் பதவி வழங்கிக் கௌரவம் செய்ததை ஞாபகமூட்ட வேண்டியுள்ளது, ஈபிஆர்எல்எவ் அமைப்புக்காக சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு மீன்பிடி இலாகாவில் ஆலோசகர் பதவியும், ரெலோ அமைப்புக்காக ஜே.திவ்வியநாதனுக்கு ஓர் ஆலோசகர் பதவியும் வழங்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமையுடன் கூடிய தங்கு விடுதியும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதே போன்று விடுதலைப் புலிகளுடன் இணைந்து குரல் கொடுத்த போது தமிழ் தேசிய இராணுவம் எனும் பேரில் கொண்டு செல்லப்பட்டு ஆயுததாரிகளாக்கப்பட்டவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்ற போதும் மௌனம் சாதித்து புலிகளின் செய்கைகளை நியாயப்படுத்தி வந்தவர்களில் செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் முக்கியமானவர்கள்.

எக் காலத்திலும் தமிழ் மக்களுக்கு இடைஞ்சல் தரக் கூடியவர்களாக வாழ்ந்து வந்த இப்பேற்பட்டவர்களை தமிழர்களின் காவலர்களாக எவ்வாறு ஏற்றுக் கொள்வது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என கூறிக் கொண்டு வரும் துரோகிகளை தூக்கி வீச தமிழ் மக்கள் காத்திருக்கின்றார்கள், எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள யாழ்ப்பாணம், வவுனியா நகர சபைத் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

ஸ்ரீலங்கா சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் !

சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்:
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ----- 472,789 வாக்குகள் ---- 55.377 வீதம் ----25* ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி ---- 346,321 வாக்குகள் ---- 40.53 வீதம் ---- 17 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி ---- 19,068 வாக்குகள் ---- 2.23 வீதம் ---- 2 ஆசனங்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ---- 10,163 வாக்குகள் ---- 1.19 வீதம்
தேசிய ஐக்கிய முன்னணி ---- 1495 வாக்குகள் ---- 0.17வீதம்

மொத்த வாக்குகள் ------ 854,376 ------ 94.75%
நிராகரிப்பு ------ 47,297 ------ 5.25%

ஸ்ரீலங்கா வடமத்திய மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் !

ஸ்ரீலங்காவில் நேற்று இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது.

வடமத்திய மாகாண சபைத் தேர்தல்:

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ---------307,457 வாக்குகள்---------56.37 வீதம்----------20 *ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி --------------------205,284 வாக்குகள்---------37.64 வீதம்----------12 ஆசனங்கள்
மக்கள் விடுதலை முன்னணி ------------- 26,738 வாக்குகள்-----------4.90 வீதம்----------1 ஆசனங்கள்
தேசிய காங்கிரஸ் ----------------------- 3,404 வாக்குகள்-----------0.62 வீதம்
சோஷலிஸ ஐக்கிய முன்னணி ------------- 821 வாக்குகள்---------- 0.15 வீதம்
தேசிய ஐக்கிய முன்னணி ----------------- 695 வாக்குகள்-----------0.13 வீதம்
ஜாதிக சங்வர்தன பெரமுன --------------- 252 வாக்குகள்-----------0.05 வீதம்

மொத்த வாக்குகள்--- 545,440--- 95.10%
நிராகரிப்பு----------- 28,082--- 4.90%

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

ஸ்ரீலங்காவின் நாளைய மாகாணசபைத் தேர்தல் !

ஸ்ரீலங்காவின் வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் நாளை நடக்கவிருக்கும் வேளையில் எண்ணற்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன, இன்று பலத்த வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் நடக்கவுள்ள இரு மாகாணங்களுக்குமான நான்கு மாவட்டங்களில் 73 உறுப்பினர்களில், வடமத்திய மாகாண சபைக்காக 31 உறுப்பினர்களும், சப்ரகமுவ மாகாண சபைக்காக 42 உறுப்பினர்களும் தெரிவாகவுள்ளனர்.

690 பேர் போட்டியிடும் வடமத்திய மாகாண சபைக்காக அனுராதபுர மாவட்டத்தில் 21 பேரும், பொலநறுவ மாவட்டத்திலிருந்து 10 பேருமாக மொத்தம் 31 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 569 398 வாக்காளர்கள் அனுராதபுர மாவட்டத்தவர்களும், 277 056 வாக்காளர்கள் பொலநறுவை மாவட்டத்தவர்களுமாக மொத்தம் 846 454 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அனுராதபுர மாவட்டத்தின் 12 அரசியல் கட்சிகளில் இருந்து 288 பேரும் மற்றும் 7 சுயேச்சை குழுக்களிலிருந்து 168 பேருமாக மொத்தம் 456 அபேட்சர்களும், பொலநறுவை மாவட்டத்தின் 10 அரசியல் கட்சிகளில் இருந்து 130 பேரும், 8 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 104 பேருமாக 234 அபேட்சகள் களம் இறங்குகின்றனர்.

1008 பேர் போட்டியிடும் சப்ரகமுவ மாகாண சபைக்காக இரத்திரபுரி மாவட்டத்தில் 24 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 18 பேருமாக மொத்தம் 42 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 713 205 வாக்காளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தவர்களும், 605 621 வாக்காளர்கள் கேகாலை மாவட்டத்தவர்களுமாக மொத்தம் 131 826 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தின் 12 அரசியற் கட்சிகளில் இருந்து 324 பேரும் மற்றும் 9 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 243 பேருமாக மொத்தம் 567 அபேட்சகர்களும், கேகாலை மாவட்டத்தின் 11 அரசியற் கட்சிகளில் இருந்து 231 பேரும் மற்றும் 10 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 210 பேருமாக மொத்தம் 441 அபேட்சகர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அனுராதபுர மாவட்டத்தின் 7 தேர்தற் தொகுதிகளில் உள்ள 527 வாக்களிப்பு நிலையங்களிலும், பொலநறுவை மாவட்டத்தின் 7 தேர்தற் தொகுதிகளில் உள்ள 231 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 758 வாக்களிப்பு நிலையங்கள் வடமத்திய மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் 8 தேர்தற் தொகுதிகளில் 541 வாக்களிப்பு நிலையங்களும், கேகாலை மாவட்டத்தின் 9 தேர்தற் தொகுதிகளில் 473 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 1014 வாக்களிப்பு நிலையங்கள் சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1772 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு 1698 பேர் போட்டியிடும் இவ்விரு மாகாணங்களுக்கான நான்கு மாவட்டங்களிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க 2 165 280 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். இத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற 45 அரசியல் கட்சிகளும், 34 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

இத் தேர்தல் வேலைகளில் ஈடுபடும் அதிகாரிகள் 36000 பேரில் 2100 அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பு, ஆலோசனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போது ஏற்படும் வன்முறைகளைக் கண்காணிக்கவென 21 000 பொலிஸாரும் மேலதிக பாதுகாப்புக்கென இராணுவத்தினரும் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----