தமிழீழம் எனும் சொல்லை முதலீடாக்கி ஆங்காங்கே வியாபார உத்திகள் நடைபெற்று வருகின்றன, இதற்கு உதாரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் உதிரியாக மேலைத்தேய நாடுகளில் வாழ்ந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தமிழீழ விடுதலை போராட்டம் எனும் பெயரில் சேர்த்த நிதியினையும், சொத்துக்களையும் தன் வசப்படுத்த பலத்த பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர், இதனாலேயே விடுதலைப் புலிகள் பல கூறுகளாகி ஆளுக்கு ஆள் துரோகியென்றும், மோசடிக்காரன் என்றும் பச்சோந்தியென்றும் சேறடிப்புக்களை நடாத்தி தமிழீழத்தின் பெயரால் சேர்த்த சொத்துக்களை தமக்கே உரிமையாக்கிக் கொள்கின்றனர்.
இதில் ஒரு பிரிவினரான நாடு கடந்த தமிழீழத்தவர்கள் நிதி வசூலிப்புக்காக தமிழீழ அடையாள அட்டை, தலைக்கு பத்து டொலர் எனப் பலவாறான முயற்சிகள மேற்கொண்ட போதிலும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததால் இப்போது உள்ளக கட்டமைப்பில் இருந்து விளம்பர உத்திகளைத் தயாரித்து காட்சிக்கு விட்டுள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறவினர்களின் தாலிக் கொடிகளை மூலதனமாக வைத்து தமிழீழம் எனும் பெயரால் நடைபெறும் அனுதாப வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இதுவே கடந்த காலங்களிலும் முதலாம் கட்ட, இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட விடுதலைப் போராட்டம் என்றெல்லாம் கூறப்பட்டு தமிழ் மக்களிடம் அளவற்ற நிதிகளையும், தங்க நகைகளையும் பெற்று சொந்தச் சொத்தாக மாற்றியவர்களும் இவர்களே, இந்த சொத்துச் சேகரிப்பின் சுவராசியங்களை அண்மையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலியொன்று ஆதாரங்களுடன் ஒலிபரப்பியது.
வன்னிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிட்ட செயலால் அழிக்கப்பட்ட தமிழர்கள் போக அங்கே உயிர் தப்பிய எஞ்சிய சில தமிழர்களையும் அழித்து விடுவதற்கான நிதி சேகரிப்பு சில வியாபாரிகளால் மேலைத்தேய நாடுகளில் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது, பல கூறாகப் பிரிந்து தமிழினத்தின் பெயரால் சொத்துச் சேகரிக்க ஆரம்பித்துள்ள இவ் வியாபாரிகளை இனம்கண்டு அம்பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
வானொலி ஒலிபரப்பு:
வன்னி மக்கள் பட்டினிச்சாவு - போருக்கு சேர்த்த பணம் எங்கே? - பாகம்.1
வன்னி மக்கள் பட்டினிச்சாவு - போருக்கு சேர்த்த பணம் எங்கே? - பாகம்.2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.