2011.10.15 ஆம் திகதி சனிக்கிழமை இரவு மிருசுவில், உசன் வடக்கில் உள்ள துரைசிங்கம் தர்சினி என்பவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் பல தரப்பட்ட எழுந்தமான செய்திகள் வெளிவந்துள்ளன, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் தென் பகுதியைச் சேர்ந்த சிங்கள மாணவர்களினால் தமிழர் வீடுகளில் கொள்ளை நடைபெறுவதாக சித்தரிக்கும் பொய்ச் செய்திகளை பதிவேற்றம் செய்து தமிழ் மக்களைக் குழப்பி விட்டு அதில் இன்பம் காண பகீரதப் பிரயத்தனங்களை சில ஊடகங்களும், இணையங்களும் செய்து வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் சிங்கள பிரிவினைவாதத்தினை ஊக்கப்படுத்திய இந்த ஊடகங்கள் தற்போதும் தங்களின் குறிக்கோளில் மாற்றமில்லாமல் தொடர்ந்து பிரிவினை வாதத்தினை அரங்கேற்ற சந்தற்பத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போன்று கிடைக்கும் செய்திகளுக்கு இனவாத சாயங்களைப் பூசி செய்திகளைப் பிரசுரித்து மக்களைத் தொடர்ந்து அழிவுப் பாதைக்கு நகர்த்த முயல்கின்றார்கள்.
மிருசுவில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைதானவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1. தியாகராஜா சுபாஸ்கரன் வயது 34
தேசிய அடையாள அட்டை இலக்கம் 771374855V
வித்தியாசாலை சந்தி
வல்வெட்டித்துறை - யாழ்ப்பாணம்
2.தியாகராஜா பார்த்தீபன்
பிறந்த திகதி 11/10/1986
கோவிலடி வீதி
நாவந்துறை - யாழ்ப்பாணம்
3.நாகரத்தினம் சஞ்ஜீவன்
தேசிய அடையாள அட்டை இலக்கம் 881758620V
யாழ்ப்பாணம்
4.கணேஷ் சுதாகரன்
தேசிய அடையாள அட்டை இலக்கம் 862081765V
மானிப்பாய் - யாழ்ப்பாணம்
செய்திகளை உற்று நோக்காது, பிழையான செய்திகளை கவர்ச்சியான தலைப்புகளுடன் பதிவேற்றி வாசகர்களை கவர எடுக்கும் பிரயத்தனங்களை தமிழ் சமூகத்தில் எதிர்காலம் கருதி இந்த பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் உண்மையான செய்திகளை தருமா?
மேலதிக தேடலுக்கு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.