நாடுகடந்த தமிழீழத்தவர்களுள் குழுநிலைவாதம் ஏற்பட்டதால் முரண்பாட்டவர்கள் தங்களது மேலதிக வருமானத்துக்காக குழுக் குழுக்களாக பண வசூலிப்பைத் தொடர்கின்றார்கள், இவர்களுள் ஒரு குழுவான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினருக்கு ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் லண்டன் வெளிப் பகுதி (லண்டன் – பேர்மிங்ஹாம்) வெற்றிடத்துக்காக ஈபிடிபி முன்னாள் உறுப்பினர் சிவா எனப்படும் வன்னியசிங்கம் குணசீலன் நாடுகடந்த தமிழீழத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பிரதமர் உருத்திரகுமாரனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1990 - 1996 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தீவகப் பகுதியின் பொறுப்பாளரான இராமேஸ்வரன் (மதன்), இராமமூர்த்தி (சீலன்) சகோதரர்களுக்கு வலதுகரமாகச் செயற்பட்டு வந்தவர் வன்னியசிங்கம் குணசீலன் (சிவா) ஆகும்.
1996 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த இராமேஸ்வரன், இராமமூர்த்தி போன்றோர் நெடுந்தீவு புகையிலை வியாபாரிகளின் புகையிலைகளை முறைகேடாக கையாடியமை தொடர்பான ஈபிடிபியின் உள்ளக விசாரணையில் குற்றவாளியாகக் கண்டு பிடிக்கப்பட்டமையினால் கட்சியில் இருந்தும், பாராளுமன்ற அங்கத்துவத்தில் இருந்தும் நீக்கப்பட்ட போது அவர்களுக்கு உடந்தையாக இருந்த வன்னியசிங்கம் குணசீலன் (சிவா) பல்வேறு குற்றத்துக்காக தண்டனை பெற்று ஈபிடிபியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தேடலுக்கு:
நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்த ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் பிரிட்டனில் தேர்வு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.