தேர்தல் காலத்தில் மாத்திரம் ஒற்றுமை பற்றிப் பேசி மக்களிடம் வாக்கு வேட்டைக்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தேர்தல் முடிந்ததும் ஒற்றுமையை மறந்து விடுகின்றனர், இவ் ஒற்றுமையின்மை நீடிக்குமானால் எம்மால் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதரலிங்கம் 2011.10.15 ஆம் திகதி (நேற்று) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி தொடக்க நிகழ்வில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
எமது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க முடியாத நாம் எவ்வாறு ஒட்டு மொத்த தமிழ் மக்களினது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கப் போகின்றோம், ஊடகங்களினூடாக மக்களின் விமர்சனங்களை பார்க்கின்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வளவு காலத்துக்கு உயிர் வாழும் என எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து ஏமாற்ற முடியாதென பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினருமான வினோநோதாரலிங்கம் உரையாற்றியது போன்று ஏனையோரும் உள சுத்தியுடன் மனம் திறந்து தங்களை சுய விமர்சனம் செய்வார்களாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே சிறந்த ஒரே ஒரு அமைப்பினராக திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.
மேலதிக தேடலுக்கு :
த. தே. கூட்டமைப்பு தலைவர்கள் மத்தியிலும் ஒற்றுமையின்மை நிலவுகிறது - விநோ எம்.பி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.