ஞாயிறு, 13 நவம்பர், 2011

மீளா துயில் கொண்ட சிவதாசன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)


வட இலங்கை இடதுசாரி தலைவர்களுள் ஒருவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும்,  யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இரண்டுமுறை பதவி வகித்திருந்தவருமான தோழர் சிவதாசன் அவர்கள், இன்று (2011.11.13) மாலை தனது 77வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் 2006ல் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தும் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருந்த தோழர் சிவதாசன் அவர்கள் ஏறத்தாழ 50 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்ட விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் இடதுசாரி அரசியல் தலைவர்களுள் ஒருவர் என்பதுடன் அறுபதுகளின் பிற்பகுதியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்திருந்த பல ஆயுத அரசியல் போராட்டங்களின் முன்னோடிகளுள் ஒருவருமாவார். இலங்கையின் மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த சிறந்த மொழி பெயர்ப்பாளருமான தோழர் சிவதாசன் அவர்கள் இறக்கும்வரையில் இலங்கையின் ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களின் விமோசனத்திற்காக அயராது குரல்கொடுத்துவந்திருந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மாணவப் பருவத்திலேயே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த தோழர் சிவதாசன் அவர்கள், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டு; வடக்கு கிழக்கில்; நிகழ்ந்த பல்வேறு அரசியல் போராட்டங்களில் பங்குபற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைக்கும் சென்றவராவார்.

தோழர் சிவதாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்த காலத்தில் தொழிற் சங்கப் பணிகளில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றியவர். இலங்கைத் தொழிற் சங்க சம்மேளனத்தின் பிரதிநிதியாக இலங்கைப் போக்குவரத்துச் சபை, தோட்டத் தொழிலாளர்கள் சங்கம், காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை போன்றவற்றில் தொழிற்சங்கங்களைக் கட்டியெழுப்பியதுடன், அந்த அமைப்புகளின் தொழிற்சங்க உரிமைகளுக்காகவும், தொழிலாளர்களது நலன்களுக்காகவும் அயராது போராடியவர். இவற்றிற்கும் மேலாக இலங்கை தொழில் நீதிமன்றத்தில் இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதியாக வாதாடி, தொழிலாளர்களுக்கு பல வெற்றியையும் ஈட்டிக் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிய காலத்தில் பிரபல அரசியல் தலைவர்களாக விளங்கிய தோழர்கள் டொக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க, பீற்றர் கெனமன், கே.பி.சில்வா போன்றோருடனும், கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதின் பின்னர் தோழர் என்.சண்முகதாஸனுடன் இணைந்து பணியாற்றிய சமயம், தோழர்களான பிரேம்லால் குமாரசிறி, எஸ்.டி.பண்டாரநாயக்க போன்றவர்களுடனும், வடபகுதியில் சகலரது நன்மதிப்பையும் பெற்றிருந்த கம்யூனிஸ்டுகளான தோழர் மு.கார்த்திகேசன், தோழர் வி.ஏ.கந்தசாமி ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியவர். இக்காலகட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழிநடாத்திய போராட்ட வரலாறும் தோழர் சிவதாசனுக்குரியது.

தோழர் சிவதாசன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டபோது 1986ம் ஆண்டில் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டு மிகவும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், நீண்ட காலமாகத் சிறை வைக்கப்பட்டிருந்தார். புலிகளது பிடியிலிருந்து தப்பி வந்த அவர், தனது நெருக்கமான சகாக்களுடன் பல கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு, புலிகளது ஜனநாயக மறுப்புக்கு எதிராகவும், மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் மக்களை அணி திரட்டுவதில் தனது உயிரையும் துச்சமென மதித்துச் செயற்பட்டிருந்தார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையில் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டு, வடக்குக் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவதிலும், இலங்கை இனப் பிரச்சினையின் இறுதித் தீர்வுக்கு, இந்தியாவின் உதவியும், ஒத்தாசையும் அவசியம் என்பதை உணர்ந்து செயலாற்றியவர் என்பதுடன் தோழர் பத்மநாபாவின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் உரியவராகவும் இருந்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் தெரிவு செய்யப்பட்டு அக்கட்சியின் முக்கியஸதர்களில் ஒருவராகவும் இருந்து மக்கள் பணியாற்றியிருந்த தோழர் சிவதாசன் அவர்கள், பின்னர் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராகவுமிருந்து சபையின் வளர்ச்சிக்காக  அரும்பாடுபட்டார்.

தற்போது இலங்கை அமைச்சரவையில் கைத் தொழில் அபிவிருத்தி அமைச்சராகவுள்ள தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தந்தையாராகிய திரு கதிரவேல் அவர்கள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்  உறுப்பினராக இருந்த போது தோழர் சிவதாசன் அவர்களும் இணைந்து பணியாற்றியிருந்து, பின்னாளில் தோழர் கதிரவேல் அவர்களின் சகோதரியையே தனது வாழ்க்கைத் துணைவியாகவும் ஏற்றிருந்தார்.

மனிதநேயப்பண்பு, பன்மைத்துவ அரசியல் கோட்பாடு இவைகளோடு புலிகளின் தவறான வழிமுறைக்கு எதிராக இடைவிடாது குரல்கொடுத்து வந்திருந்த தோழர் சிவதாசன் அவர்கள், ஏழை மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்த நாளாந்த பிரச்சினைக்கான தீர்வு தொடக்கம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான இறுதித்தீர்வு வரை அதிக அக்கறையோடு செயலாற்றியிருந்த  நிறைவான நீண்ட அரசியல் வரலாறு கொண்டவர். அவரது மறைவு தமிழ் மக்களுக்கு, குறிப்பாக தமிழ் இடதுசாரி இயக்கத்திற்கும், இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட ஏழை மக்களுக்கும் பேரிழப்பாகும்.



1 கருத்து:

  1. * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

    * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

    * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    * போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----