கொழும்பு மாநகரசபையின் ஆட்சிப் பொறுப்பைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிராததால் மாநகரசபை முதல்வர் ஏ.ஜே.எம். முஸாமில் நிர்வாகத்தைக் கொண்டு நடாத்துவதில் சிக்கல்கள் நிகழக் கூடும் என உணர்ந்ததால் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவினை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் கோரியுள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்துக்கு ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரவு வழங்குவதாயின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென மனோ கணேசன் கோரிக்கை விடுத்ததற்கு அமைய இன்று (2011.11.07) மாலை லண்டன் பயணிக்கும் ரணில் விக்கிரமசிங்க அவசரமாக கடிதத்தினை தயாரித்து மனோ கணேசனுக்கு அனுப்பியுள்ளார்.
மனோ கணேசனின் நிபந்தனைகளை புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொள்வதுடன் மாநகர முதல்வருக்கும் அறியப்படுத்தியுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கீகாரத்தின் பின்னர் கையொப்பம் இடுவேனென்றும் ரணில் விக்கிரமசிங்க கடிதத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபைக்கு வழங்கவுள்ள ஆதரவு தொடர்பாக நாளை (2011.11.08) காலை கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமை சந்திப்பை நடாத்தவுள்ளது, இச் சந்திப்பில் டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகரசபைக்கு ஜனநாயக மக்கள் முன்னணி கொடுக்கவுள்ள ஆதரவு தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கு மாநகரசபையில் கிடைக்கவுள்ள பல்வேறு பொறுப்புகளைக் கொண்டே 2012 ஆம் ஆண்டுக்குரிய உடன்படிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.