தமிழ் ஆக்க இலக்கியத்துறையில் தமிழகப் படைப்பாளிகளுள் ஈழத்துப் படைப்பாளிகள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நவாலியூர் சோமசுந்தரப் புலவர் முதல் இன்றைய இளம் படைப்பாளிகள் ஈறாக எண்ணற்ற படைப்பாளிகளின் பல படைப்புகள் வெளிவந்துள்ளன, அவற்றுக்குரிய தளங்களும், தட்டிக்கொடுப்புக்களும் உரிய காலத்தில் கிடைக்காமையால் பல காத்திரமான படைப்புகள் காணாமலே போய் விட்டன.
இன்றைய சினிமாப் பாடல்களின் வரி வடிவங்களில் கருத்தியல் ரீதியாக எவற்றையும் காண முடியாது, மாறாக அவற்றில் மலிந்திருப்பவை துள்ளல் இசையுடன் கூடிய பாலான வார்த்தைகளே என்றால் அதில் மிகையில்லை. இப்படியான பாடலாசிரியர்களே தமிழக சினிமாவிலும் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள், ஆனால் ஈழத்து படைப்பாளிகளின் கவிதைகளில் வக்கிரமான அல்லது பாலான கருத்தியலைக் காண்பது முயற்கொம்பைத் தேடுவதற்கு ஒப்பாகும்.
தமிழ் இசையுலகை தமிழக சினிமா ஆட்கொண்டுள்ளதால் ஈழத்து படைப்பாளிகளுக்குரிய அந்தஸ்து கிடைக்காமல் உள்ளது, தமிழீழ விடுதலைப் புலிகளினால் அவர்கள் சார்ந்த படைப்பாளிகள் புரட்சிகர போர்ப் பாடல்களைப் பாடி ஆங்காங்கே கௌரவம் பெற்றார்கள், ஆனால் ஒட்டுமொத்த ஈழத்து படைப்பாளிகளுக்கும் அக் கௌரவம் கிடைக்கவில்லை, உள்நாட்டு யுத்தமும் இதற்கொரு காரணமெனலாம்.
கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற பல கவிஞர்களின் கவிதைகள் நூலுருவில் வெளிவந்துள்ளதுடன் பரிசில்களையும் பெற்றுள்ளன, இந்த வரிசையில் "காந்தள் பூக்கும் தீவிலே...." எனும் பாடலின் மூலம் பலரினாலும் திரும்பிப் பார்க்க வைக்கப்பட்டவர் பொத்துவில் அஸ்மின் எனும் இளம் படைப்பாளி, இலங்கையிலுள்ள சக்தி தொலைக்காட்சியின் "இசை இளவரசர்கள்" எனும் நிகழ்ச்சியின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான அஸ்மின், சிறந்த பாடலாசிரியருக்கான ஜனாதிபதி விருது மற்றும் அகஸ்தியர் விருதி போன்ற பல விருதினையும் பெற்றுள்ளார், இவரின் வார்த்தை வரிகளுக்கு வவுனியா கந்தப்பு வசந்தன் இசையுடன் குரல் கொடுக்க, கூடவே வசந்தனின் சோதரி ஜெயப்பிரதாவும் பாடுகின்றார்.
2002 ஆம் ஆண்டு "விடை தேடும் வினாக்கள்", 2003 ஆம் ஆண்டு "விடியலின் ராகங்கள்" எனும் இரு கவிதை நூல்களை வெளியிட்ட கவிஞர் அஸ்மின் விரைவில் "ரத்தம் இல்லாத யுத்தம்" எனும் கவிதை நூலை விரைவில் வெளியிடவுள்ளார் அத்துடன் விரைவில் வெளிவரவிருக்கும் "பனைமரக்காடு", "வல்லைவெளி" போன்ற திரைப்படங்களுக்கான பாடல்களையும் இவரே எழுதியுள்ளார் என்பது மேலதிக தகவலாகும்.
இசை:கே.ஜெயந்தன்
வரிகள்:கவிஞர் அஸ்மின்
பாடியோர்: கே.ஜெயந்தன், கே.ஜெயப்பிரதா
• பல்லவி
ஆண்:
காந்தள் பூக்கும் தீவிலே..- உன்
காந்தப் பார்வை தீண்டுமா..?
பூங்காற்று எந்தன் பாடலை
உன் காதில் சேர்க்குமா....?
பெண்:
இந்த வானம் பூமி நீயடா
இன்று நானும் கூட நீயடா
நாம் காதல் செய்து வாழவே
இந்த ஜென்மம் போதுமா...?
ஆண்:
கனவிலும் உன்னை தேடுகின்றேன்
கண்களை விட்டு தூரப் போனாய்...
நினைவிலே வந்து காதல் சொல்லி
பூக்கள் வீசடி
ஒரு வார்த்தை பேசடி
(காந்தள் பூக்கும் தீவிலே...)
• சரணம்-01
பெண்:
ஒரு தடவை வந்து போனாய்
பல தடவை நொந்து போனேன்
உன் இதயம் மறந்தால் நான்
உயிருடனே உதிர்ந்து போவேன்..!
உன் சிரிப்பில் இதயம் தொலைத்தேன்
உன் தெருவில் தேடி அலைந்தேன்
உன் முகத்தை காணாமல்
உயிருடனே நாளும் புதைந்தேன்....!
ஆண்:
மேசையில் பலகதை
படிக்காமல் கிடக்கின்றதே...!
ஆசையில் என்விழி
உனை தேடி தவிக்கின்றதே...!
நான் உலகமே போற்றும்
கலைஞனடி!
உன் காதலால் இன்று
ரசிகனடி....
நீ உதட்டினால் என்னை
கொன்றிட வந்தால்
ஆயிரம் முறை நான் சாகரெடி...!
(காந்தள் பூக்கும் தீவிலே)
ஆண்:
என்தேசம் நீயடி
உயிர் சுவாசம் நீயடி
என்வாழ்வும் நீயடி
எந்தன் ஆறுயிரே......!!
• சரணம்-02
பெண்:
பேருந்தில் நெருங்கி இருந்தாய்
பேசாமல் நொருங்கி நகர்ந்தேன்...
உன்னோடு பேசாமல்
தனிமையில் பேசி சிரித்தேன்...
உன்பெயரை சொல்லி ரசித்தேன்..!
உனக்காக சமையல் பயின்றேன்
உன்னோடு வாழத்தான்
பூமியிலே பெண்ணாய் பிறந்தேன்..!
ஆண்:
விழியிலே உன் முகம்
விடிந்தாலும் இருக்கின்றதே...
வலியிலே என்மனம்
துடித்தாலும் சிரிக்கின்றதே...
நான் உனக்கென பிறந்த
கவிஞனடி...!
நீ இதழ்களை கொண்டு
என்னைப்படி..!
உன் கண்களின் அழகை
ஒருமுறை பார்த்தால்
கவிதைகள் தற்கொலை செய்யுமடி..!!
(காந்தள் பூக்கும் தீவிலே)
ஆண்:
உயிர்பூவும் நீயடி..
என்தீவும் நீயடி..
இங்கு யாவும் நீயடி..
எந்தன் தேவதையே..
(காந்தள் பூக்கும் தீவிலே)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.