இலங்கையில் தமிழ்
மக்கள் மீது 2009ஆம் ஆண்டு
மே
மாதம் இடம்பெற்ற போர்க் குற்றத்தின் நீட்சியாக இலங்கைத் தமிழ்ப் பெண் மீனா என்பவரை ஆதாரம் காட்டி
ஆஸ்திரேலிய ஏ.பி.சி. தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய காட்சிப் பதிவு தொடர்பாக "தி நேசன்" இன்று 2011.10.23 ஆம் திகதி தமிழ்ப் பெண் மீனா பற்றிய மேலதிக தகவல்களை வழங்கியுள்ளது.
வல்வெட்டித்துறையைச்
சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி நவரங்கிமீனா எனும் மீனா 1982.10.30 ஆம் திகதி பிறந்துள்ளார்,
ஆஸ்திரேலியாவில் குடியுரிமை மற்றும் கல்வியினை பெற்று மேலதிக கற்றல் ஆய்வுக்காக
2004 ஆம் ஆண்டு இலங்கை வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கஸ்ரோவின் அனுமதியுடன் ஆறு
மாத இராணுவ பயிற்சி பெற்று மாலதி படையணியில் ஈழநதி எனும் பெயருடன் செயற்பட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு
குபேரன் எனும் இராசரெத்தினம் தயாகரன் எனும் விடுதலைப் புலி உறுப்பினரைத் திருமணம் செய்து
2008 ஆம் ஆண்டு வன்னியில் உள்ள பொன்னம்பலம் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆஸ்திரேலிய ஏபிசி தொலைக்காட்சி ஒளிபரப்பிய குற்றச்சாட்டை மறுதலிக்கக் கூடியதாக மேற்கூறிய தகவல்களின் மூலம் தி நேசன் எனும் ஊடகம் மீனா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.
மேலதிக தேடலுக்கு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.