செவ்வாய், 6 டிசம்பர், 2011

வன்னி மக்கள் பட்டினிச்சாவு - போருக்கு சேர்த்த பணம் எங்கே? - ஒலி இணைப்பு


வன்னியில் ஶ்ரீ லங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உக்கிர மோதல் இடம்பெற்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காக புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் பலத்த பிரயத்தனங்களைச் செய்து வந்தார்கள், அந்தந்த நாட்டு அரசாங்கங்களை விடுதலைப் புலிகளின் பக்கத்துக்கு திரும்பிப் பார்க்கக் கூடியதாகவும், அத்துடன் அந் நாட்டு மக்களின் அனுதாபத்தை பெறவும் போராட்டங்களை தமிழீழ விடுதலை புலிகள் விரிவுபடுத்தி இருந்ததுடன் தமிழர்களிடம் பண வசூலிப்பையும் மேற்கொண்டனர்.

இந்தக் காலத்தில் வன்னிப் பெருநிலப் பரப்பில் ஶ்ரீ லங்கா படைகளின் அதிகாரம் இறுகிக் கொண்டிருந்ததால் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுக்கு அணையாகக் கொண்டு சென்ற அப்பாவி மக்களை யுத்தத்துக்குப் பலியாக்கினர், அப்பாவிப் பொது மக்கள் பலர் விழுப்புண்ணடைய, உணவின்றி பட்டினிச் சாவையும் எதிர் நோக்கினர், வன்னியில் மக்கள் படும் அவஸ்தைகளை உலக்குக்குக் காட்டி அதில் அனுதாபத்துடன் கூடிய ஆதரவையும் பண வசூலிப்பையும் மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கிடைத்த பணத்தை யுத்த நெருக்குவாரத்துக்குள் சிக்கிய மக்களுக்கு கொடுக்காமல் மாறாக தங்களது கஜனாக்களை நிரப்பிக் கொண்டனர், அதற்கு ஏற்றாற் போல் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டதாக ஶ்ரீ லங்கா அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பின்னர் மேற்கத்திய நாடுகளில் அதிகாரம் செலுத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் பல பிரிவுகளாகப் பிரிந்து மோதிக் கொண்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்திக் கொண்டனர்.

தமிழீழத்துக்கென வசூலிக்கப்பட்ட பணமும் உடமைகளும் விடுதலைப் புலிகளின் பெரும்புள்ளிகளாகக் காட்டிக் கொண்டோரால் முடக்கப்பட்டு சொந்தப் பெயரில் முதலீடு செய்யப்பட்டுக் கொண்டிருக்க, வன்னியில் யுத்தம் முடிவுற்று மக்கள் பட்டினியால் நொந்து கொண்டிருந்தார்கள், பல போராளிக் குடும்பங்கள் உறவுகளை இழந்து நிர்க்கதியாகி உள்ளனர், இதனால் சேர்க்கப்பட்ட பணம் எங்கே என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதன் ஓரங்கமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பாகும் "ரி.ஆர்.ரி தமிழ் ஒலி" வானொலி வன்னி மக்கள் பட்டினிச்சாவு- போருக்கு சேர்த்த பணம் எங்கே? எனும் வினாவுடன் கடந்த 2011.12.01 ஆம் 04 திகதிகளில் வானலை ஊடான நிகழ்ச்சியை நடாத்தினர்.

காலம் கடந்தாவது ஞானோதயம் பெற்ற "ரி.ஆர்.ரி தமிழ் ஒலி"யை முன் உதாரணமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நியாயம் கற்பிக்கும் ஏனைய ஊடகங்களும், அமைப்புக்களும் முன் வர வேண்டும்.

நன்றி: ரி.ஆர்.ரி தமிழ் ஒலி:
(ஒலி இணைப்பைக் கேட்க அழுத்தவும்)
வன்னி மக்கள் பட்டினிச்சாவு - போருக்கு சேர்த்த பணம் எங்கே? - பாகம்.1

வன்னி மக்கள் பட்டினிச்சாவு - போருக்கு சேர்த்த பணம் எங்கே? - பாகம்.2

1 கருத்து:

  1. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

    * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

    * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

    * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

    * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    * போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----