பாராளுமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாராளுமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 டிசம்பர், 2011

மக்கள் ஆதரவின்றி பின் கதவால் உள்நுழைந்தவரே சுமந்திரன் - பாராளுமன்றில் ஶ்ரீரங்கா உரை! - காணொளி


ஶ்ரீ லங்கா பாராளுமன்றத்தில் நேற்று 2011.12.13 ஆம் திகதி தகவல் ஊடகத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதம் இடம்பெற்ற போது உரையாற்றிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்காவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமன பாராளுமன்ற உறுப்பினர் சுமந்தினனுக்கும் காரசாரமான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

செவ்வாய், 6 டிசம்பர், 2011

ஶ்ரீ லங்கா பாராளுமன்றில் ஏற்பட்ட கைகலப்பும், தடைப்பட்ட வரவுசெலவுத் திட்ட உரையும்! - காணொளி


ஶ்ரீ லங்கா பாராளுமன்றத்தில் கடந்த 2011.12.21 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்த போது எதிர்க் கட்சியினர் சுலோக அட்டைகளைத் தாங்கி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் அச் சுலோக அட்டைகளை ஆளும் தரப்பினர் பறிக்க முற்பட்ட போது சபையில் கைகலப்பு ஏற்பட்டது.

வியாழன், 8 செப்டம்பர், 2011

தமிழ் மக்களை பீதிக்குள்ளாக்கி வரும் மர்மமனிதன் யார்? - சுரேஸ் பா.உ. சூளுரை. - காணொளி இணைப்பு


இலங்கையில் பயங்கரவாதத்துடன் கூடிய யுத்தம் முடிவடைந்து விட்டது, நாங்கள் அபிவிருத்தியை நோக்கி முன்னேறிச் செல்கின்றோம், ஆகவே எமது நாட்டுக்கு இனிமேல் அவசரகாலச் சட்டம் தேவையில்லையென ஜனாதிபதி கூறி இருக்கின்றார், இவரின் கூற்றுக்கு மறுதலையாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதற்குரிய எந்த அறிகுறியும் இல்லை.

ஞாயிறு, 10 ஜூலை, 2011

பாராளுமன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முகத்திரையைக் கிழிக்க முனைந்த பிரதியமைச்சர் கருணா! - வீடியோ இணைப்பு

கடந்த 2011 ஜூன் 07 ஆம் திகதி பிற்பகல் 2.05 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தனால் பாராளுமன்றத்தில் பிரேரிக்கப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணையின் உரையைத் தொடர்ந்து மாலை 7.25 மணியளவில் உரையாற்றிய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாதப் போக்கினைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

திங்கள், 8 டிசம்பர், 2008

2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

கடந்த 2008 நவம்பர் 6 ஆம் திகதி ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு வரவு செலவுத்திட்டம் இன்று மதியம் சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார முன்னிலையில் மூன்றாவது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இவ் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு ஆதரவாக 126 பேரும் எதிராக 84பேரும் வாக்களித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சி (கரு ஜெயசூரிய அணி), ஜே.வி.பி.(விமல் வீரவங்ஸ அணி), இ.தொ.கா, மக்கள் மலையக முன்னணி, ஈ.பி.டி.பி. என்பன வரவு செலவுதிட்டத்திற்கு ஆதரவாகவும், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி (சோமவன்ச அணி) என்பன எதிராகவும் ஹக்கீமின் முஸ்லீம் காங்கிரஸ், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி என்பன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

செவ்வாய், 7 அக்டோபர், 2008

கருணா அம்மான் பாராளுமன்றில் ஆற்றிய கன்னி உரை!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொகுபண்டார முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்து சபையில் கருணா அம்மான் கன்னி உரையாற்றினார்.

"பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்தப் பதவியை எனக்குத் தந்தமைக்கு ஜனாதிபதிக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இப்பதவி எனக்கு மட்டும் வழங்கப்பட்ட ஒன்றாக நான் கருதவில்லை. தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள கௌரவத்தையே இப்பதவி பிரதிபலிக்கிறது. தமிழ் மக்கள் பயங்கரவாதத்தை நிராகரித்து பாராளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் நம்பிக்கை வைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார். இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்"

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

ஸ்ரீலங்காவில் கொல்லப்பட்ட காயப்பட்டோர் விபரம் !


ஸ்ரீலங்காவில் கடந்த எட்டு மாதங்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த படைதரப்பினரதும் பொது மக்களினதும் விபரங்களைப் பாராளுமன்றத்தில் பிரதமரும் பாதுகாப்புப் பிரதியமைச்சருமான ரத்னஸ்ரீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் பொலிஸ், இராணுவ படை தரப்பிலிருந்து 896 பேர் கொல்லப்பட்டும், 5908 பேர் காயமடைந்தும் உள்ளனர். பொதுமக்களில் 381 பேர் கொல்லப்பட்டும், 621 பேர் காயமடைந்தும் உள்ளதாக அத்தகவல் கூறுகின்றது.

இவை அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் ஆகும், இவை தவிர்த்து பதிவு செய்யப்படாத கொலை மற்றும் காயப்பட்டவர்களினையும் சேர்த்தால் இப்பட்டியல் நீளக் கூடுமென அறிய முடிகின்றது.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----