சனி, 21 ஏப்ரல், 2007
2012.12.22 ம் நாள் உலக அழிவு ஏற்படும்?
உலக அழிவை ஏற்படுத்தப் போகும் நொடிப் பொழுதை அறிந்து கொள்ளக் கூடிய கடிகாரத்தை அமெரிக்க சிக்காக்கோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் 1947ம் ஆண்டில் கண்டு பிடித்துள்ளார்கள்.
மத்திய அமெரிக்கா, தென் மெக்சிக்கோ போன்ற பகுதிகளில் குடியிருந்த ஆதிக்குடிகளான செவ்விந்தியர்கள் தங்களின் மாந்திரீக நம்பிக்கைக்கேற்ப கால அட்டவணையொன்றைச் செப்பனிட்டு வைத்திருந்தனர், இவர்களின் கணிப்பின்படி 2012 டிசம்பர் 22ம் திகதி உலக அழிவு ஏற்படுமென கூறப்பட்டுள்ளது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ் ஆதிக் குடிகள் கணித்துக் கூறியுள்ள உலக அழிவு ஏற்படப் போகும் நொடி பற்றிய கருத்தினை ஒத்ததாகவே சிக்காக்கோ பல்கலைக் கழக விஞ்ஞானிகளின் கடிகாரமும் கூறுவதாக அறிய முடிகின்றது.
நாசா விண்வெளி ஆராட்சி நிறுவனத்தாரின் ஆய்வின்படி 3600 ஆண்டுகளுக்கு ஒரு தடவை "திபுரு" எனும் பெயருடைய வால் நட்சேத்திரம் புவியைத் தாண்டிச் செல்வதாகவும் அதன் சுற்று வட்டத்துக்கமைய எதிர்வரும் 2012.12.22 இல் பூமியைத் தொட்டுச் செல்லுமெனவும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இத் "திபுரு" வால் நட்சேத்திரம் தாண்டிச் செல்லும் போது புவியுடன் மோதுண்டால் மாபெரும் உலக அழிவு ஏற்படுமென்பது நிச்சயமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ள இக் கடிகாரம் கூறிய 18 நேர மாற்றங்களில் உலக அழிவு ஏற்பட்ட பதிவு இருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இறுதியான 18 வது தடவை இக் கடிகாரத்தில் ஏற்பட்ட நேர மாற்றத் தினமான 2007ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் வடகொரியாவில் அணுசக்திப் பரிசோதனை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
3 கருத்துகள்:
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உங்கள் காமெடி ரொம்ப நல்லாயிருக்கு!!!;)
பதிலளிநீக்குயோசிப்பவரின் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு2012ம் ஆண்டு உலக அழிவு ஏற்படலாமென மத்திய அமெரிக்க, தென் மெக்சிக்கோ செவ்விந்திய ஆதிக் குடிகளின் கணிப்பு கூறினாலும் கூட நாசா விஞ்ஞானிகள் 1947இல் கண்டு பிடித்துள்ள கடிகாரமும் இதற்கு ஆதரவூட்டுகின்றதல்லவா?
இரண்டாயிரமாம் ஆண்டு முதல் உலகம் அழியப் போகின்றது, கடல் நிலத்தை ஆட்கொள்ளப் போகின்றது என்றெல்லாம் புனித விபிலியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது, நானும் உங்களைப் போன்று தான் இக் கருத்தை காமடியாக எடுத்துக் கொண்டேன், ஆனால் அதன் விளைச்சலை 2005.12.26ம் நாள் காலை 8.30 மணியளவில் சுனாமி எனும் பெயரில் நேரடியாக உணர்ந்து கொண்டேன்.
கடல் பல நாடுகளையும் பல உயிர்களையும் ஏப்பமிட்டதை அறிந்திருக்காதவர்களும் சுனாமி என்பதை காமடியெனவே கருதிக் கொள்ளுவர்.
எது எப்படியோ இதனை காமடியென விட்டுவிட முடியாதல்லவா?
நல்ல இருக்கு
பதிலளிநீக்கு