ஶ்ரீ லங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட தலைமைகள் அழிக்கப்பட, கைதானோர் சிறைச்சாலைகளிலும், புனர்வாழ்வு பெற்றோர் விடுதலையாகி பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர், இதற்கு விதிவிலக்காக எஞ்சியோர் சிலர் பல குழுக்களாகப் பிரிந்து மேற்கத்திய நாடுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு புத்துயிர் கொடுக்கவுள்ளதாகக் கூறி நிதி வசூலிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பண வசூலிப்புடன் நின்றுவிடாது, தமிழீழ ஆதரவாளர்கள் மீது காமலீலைகளையும் புரிவதாக இணையத் தளச் செய்திகள் கூறுகின்றன, "உலக்கை தேய்ந்து உளிப் பிடியான கதை போல" தமிழீழ விடுதலைப் போராட்டம் சுருங்கி காமப் போராட்டம் சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என இரு பிரிவுகளாக செயற்படும் மேலைத்தேய தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒன்றான தலைமைச் செயலகத்தின் கொள்கைப் பரப்பாளர் மயூரன் என்பவர் மலேசிய நாட்டு தமிழீழ ஆதரவாளரான தமிழ் யுவதி ஒருவருடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பாடல் தொடர்பான ஒலிப்பதிவுகளும், படங்களும் இணையத் தளத்தில் பதிவாகியுள்ளன.
தனது முதுகில் விடுதலைப் புலிகளின் சின்னத்தை பச்சை குத்தியுள்ள பாதிக்கப்பட்ட மலேசிய யுவதியின் வாக்குமூலம் கீழே இணைக்கப்பட்டுள்ளது,
மேலதிக தேடலுக்கு : இலங்கைநெற்
என்ன சார் இதுவெல்லாம் நியாயமா? ஏன் ஒருவர் மேல் ஒருவர் இப்படி சேறு வாரி பூசுவது. இது வெல்லாம் பெண்களை கேவலப்படுத்துவதாக இல்லையா! ரொம்ப கேவலமா இருக்கு. தனிபட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு கீழான ஒரு செயல்.
பதிலளிநீக்குஇதையெல்லாம் இணையத்தில் போடுறீங்களே!
பதிலளிநீக்குதமிழ்மாறனின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவிடுதலைப் போராட்டத்தின் பேரில் நடக்கும் அநியாயங்களை கண்டும் காணாதவர்கள் போன்று கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது, ஏனெனில் நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கின்றோம்.
சம்பந்தப்பட்ட பெண்ணைப் போன்று வேறு பெண்களும் விடுதலைப் போராளிகள் என்போரின் வார்த்தை ஜாலங்களுக்கு பலியாகக் கூடாது என்பதே இந்தப் பதிவின் நோக்கம்.