அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், ஔவையார், இளங்கோ அடிகள் போன்ற பற்பல விற்பன்னர்கள் தமிழைச் செம்மைப்படுத்த அரும்பாடுபட்டு உழைத்தார்கள், அவர்களின் நிகரற்ற சேவையினாலேயே இன்று தமிழ்மொழி செம்மொழியாகத் திகழ்கின்றது. ஆங்கில மோகத்தில் சிக்கியுள்ள எமது இளம் தலைமுறையினர் எதிர்காலத்தில் தமிழை முற்றாக மறந்து போகக் கூடிய விதத்தில் தற்போது துள்ளிசையில் தமிங்கில திரைப்படப் பாடல்கள் தயாரிக்கப்படுகின்றன.
தமிழை செம்மொழியாக்கிய புலவர்களுக்கு விழா எடுக்க தயங்கும் தமிழர்கள், தமிழைக் கொலை செய்து தமிங்கிலத்தில் கவிதை புனைந்து பாடல் பாடும் பண்படாதவர்களுக்கெல்லாம் பற்பல விருதுகள் கொடுத்து பண்பட்டவர்களெனக் கௌரவிப்பது தமிழின் துரதிஸ்டம்.
சித்திரவதைக்குள்ளாகும் தேன் தமிழின் பாடல்கள் வரிசையில் இப்போது நடிகர் தனூஸின் வரிகளும் தடம் பதிக்கத் தொடங்கி விட்டன, இதற்கு ஊடகங்களும் முன்னுரிமை கொடுப்பதால் தமிங்கிலத்திலான "WHY THIS KOLAVERI KOLAVERI KOLAVERI DI" எனும் பாடலுக்குச் சொந்தக்காரனான தனூஸின் குரல் சிறந்த சாரீரத்துக்கு ஒப்பானது என கூறப்பட்டு எதிர்காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த சங்கீத மேதைகளால் விருதுகள் கொடுத்துக் கௌரவிக்கக் கூடும்.
சங்கீதத்தை முறைப்படி கற்று பாடல்கள் பாடும் வித்துவான்கள் பலர் தூக்கி விட எவரும் இல்லாததால் எட்டாக்கனியாக வாழ்ந்து மறைந்து விடுகின்றார்கள், பண பலத்துடன் ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தமிங்கில கவிஞர்களும், பாடகர்களும் துள்ளிசையைக் கலப்பதால் பாமரர்களின் மனதில் இலகுவில் குடிகொண்டு விடுகின்றார்கள், இதனை இசைக்கு சிறந்த அடையாளமென நினைத்து மாயையை உருவாக்குகின்றார்கள்.
"WHY THIS KOLAVERI KOLAVERI KOLAVERI DI" எனும் பாடலைக் கேட்கும் போது தனூஸுக்கு ஏன் இந்தக் கொலைவெறி எனக் கேட்கத் தோன்றுகின்றது.
Song Details:
Singers: Dhanush, Shruti Hassan
Music Composer: Anirudh
Sound Engineer: Sivakumar
Movie Name: 3
WHY THIS KOLAVERI DI LYRICS
Yo boys i am singing song
Soup song...
Flop song ...
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Rhythm correct
Why this kolaveri kolaveri kolaveri di
Maintain this
Why this kolaveri..aaa di.
Distance la moonu moonu moonu coloru whiteu
white background nightu nigthu
nightu coloru blacku
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
White skin-u girl-u girl-u
Girl-u heart-u black-u
Eyes-u eyes-u meet-u meet-u
My future dark
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Maama notes eduthuko
Apdiye kaila snacks eduthuko
Pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
Sariya vaasi
Super maama ready
Ready 1 2 3 4...
Whaa wat a change over maama
Ok maama now tune change-u
Kaila glass only english
Hand la glass
Glass la scotch
Eyes-u full-aa tear-u
Empty life-u
Girl-u come-u
Life reverse gear-u
Lovv-u lovv-u, oh my lovv-u
You showed me bouv-u
Cow-u cow-u holi cow-u
I want u hear now-u
god i m dying now-u
she is happy how-u
This song for soup boys-u
We dont have choice-u
Why this kolaveri kolaveri kolaveri di [x4]
Flop song
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் (பாரதி)
வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன்.
பதிலளிநீக்குஇன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். பகிர்விற்கு நன்றி நண்பரே!
தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி நண்பரே!
வருகைக்கு நன்றி தோழர்களே!
பதிலளிநீக்கு