ஸ்ரீலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து வடமத்திய மாகாணத்தின் பொலநறுவை மாவட்டத்தில் போட்டியிட்ட பிள்ளையான் குழுவின் மங்களம் மாஸ்டர் 5480 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.தெரிவு வாக்குகளின் அடிப்படையில் கடைசி நிலையில் இருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மங்களம் மாஸ்டருக்கு போனஸ் ஆசனமொன்றை வழங்குவதென ஆளும் கட்சி தீர்மானித்துள்ளது.
நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 20 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 12 ஆசனங்களையும் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்று 33 ஆசனங்களைக் கொண்ட வடமத்திய மாகாணசபையில் அதிகப்படியான ஆசனத்தைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு போனஸாக மேலும் இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன, இதில் ஒன்றே மங்களம் மாஸ்டருக்கு கிடைக்கவுள்ளதாகும்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.