
கொழும்பில் இடம்பெற்ற தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு ஒன்றியத்தினது 15 ஆம் உச்சி மாநாடு நேற்றுடன் நிறைவெய்தியது.
உணவு, எரிபொருள், பிராந்திய நாடுகளுக்கு இடையில் வர்த்தக மேம்பாடு மற்றும் பயங்கரவாதத்தினை முறியடித்தல் போன்ற விடயங்கள் இந்த மாநாட்டில் அதிகம் பேசப்பட்டன.
...
இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, வங்காளதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இம் மாநாட்டில் 83 வயதுடைய நேபாள பிரதமர் கிரியா பிரசாத் கொய்ராலா கால் இடறி கீழே வீழ்ந்தார், எனினும் அருகில் நின்றவர்கள் இலாவகமாக தூக்கி விட்டார்கள், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களில் நேபாள பிரதமரே வயதில் முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.16 வது உச்சி மாநாடு மாலைதீவில் இடம்பெறுமென இறுதியில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.