வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008
செஞ்சோலையில் மரிந்த மாணவிகளின் சிரார்த்ததினம்
இரண்டு வருடங்களின் முன்னர் முல்லைத்தீவில் உள்ள வல்லிபுனம் செஞ்சோலை வளாகத்தில் மீது ஸ்ரீலங்காவின் விமானப் படையினரின் 4 விமானங்கள் 16 குண்டுகளை வீசி தாக்குதலை நடாத்தியதில் கொல்லப்பட்ட மாணவிகளின் 2 ஆம் ஆண்டு சிராத்ததினம் நேற்று முல்லைத்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது.
கொல்லப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் இந் நிகழ்வில் ஒன்றாக கலந்து சோகத்தை வெளிப்படுத்திய விதம் எல்லோரினதும் மனதைக் கலங்க வைத்து விட்டது.
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்ற தயாராக இருந்த மாணவிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தகால முதலுதவி பயிற்சிக்கு வருமாறு அழைத்ததுக்கிணங்க, விரும்பியும் விரும்பாமலும் கலந்து கொண்ட மாணவிகளே கொல்லப்பட்டவர்களாவர்.
2008.08.14 ஆம் திகதி அதிகாலை செஞ்சோலை பாசறையில் பயிற்சிக்காகக் காத்திருந்த 53 மாணவிகள் உட்பட 62 பேர் கொல்லப்பட்ட கொடூரம் மனதை உருக்கக் கூடியதாகும்.
செஞ்சோலையில் வாழ்ந்த ஆதரவற்ற குழந்தைகளே இதில் கொல்லப்பட்டதாக முதலில் வந்த தகவல்கள் கூறின, இதனையே தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆமோதித்தனர், மறுநாள் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பத்து நாட்களின் பின் நடக்கவிருக்கும் உயர்தரப் பரீட்சைக்காகக் காத்திருக்கும் மாணவிகள் என்பதும் இவர்களை விடுதலைப் புலிகளே பயிற்சிக்கு வருமாறு அழைத்திருந்தனர் எனும் செய்திகளும் கூடவே கசிந்தன.
யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளையே குண்டு வீசி அழித்ததாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்தது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மனித ஜீவன்கள் என்பதை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
2 கருத்துகள்:
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்த ஆன்மாக்கள் சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.
பதிலளிநீக்குஅவர்களே எங்கள் விடுதலைக்கு வழிகாட்டவும் வேண்டிக்கொள்வோம்.
நன்றி களத்துமேடு.
எண்ணற்ற கனவுகளுன் பரீட்சைக்காகக் காத்திருந்த இம் மாணவிகளின் ஆத்ம சாந்திக்காகப் பிராத்திப்போம்!
பதிலளிநீக்குவைத்தியர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள். ஆசிரியர்கள், அரசியல்வாதிகள்...... அறிஞர்களென எமக்குக் கிடைக்கவிருந்த அருமருந்துகள் எத்தனை எத்தனை ?