யாழ். நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழாவான 24ஆம் நாளாகிய நேற்று தேர்வீதி உலா வந்து முருகனை கீழே இறக்கிய போது ஏற்பட்ட சனநெரிசலில் தீச்சட்டியின் மீது பக்தர்கள் தவறி விழுந்ததில் பதினொரு பேர் தீக்காயங்களுக்கு இலக்காகினர்.தீக்காயங்களுக்குள்ளாகியோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
..
..

தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டோர் விபரம்:
- ஏ.அருண்ராஜ் - 18 வயது - நல்லூர்
- எஸ்.சபேசன் - 8 வயது - கந்தர்மடம்
- ஆர்.குகேந்திரமாலா - 13 வயது - இணுவில்
- என்.வினேதீஸ்வரன் - 27 வயது - இணுவில்
- என்.தில்லைச்சிவன் - 27 வயது - இணுவில்
- எஸ்.ஜெககாந்தினி - 26 வயது - கொக்குவில்
- ஐ.ரதீஸ்வரன் - 36 வயது - நவாலி
- எஸ்.ஸ்ரீதரன் - 36 வயது - மானிப்பாய்
- பி.கொலிஸன் - 24 வயது - மானிப்பாய்
- கே.யோகமலர் - 57 வயது - சுன்னாகம்
- எஸ்.அரியமலர் - 53 வயது - வட்டுக்கோட்டை

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
நல்லூர்த்திருவிழா கண்ணில் நிற்கிறது.எள்ளுப் போட்டால் எள்ளு விழாது என்பார்கள்.அது இங்கேதான் பொருந்தும்.என்றாலும் இப்போ எல்லாம் பக்கதர்களின் வருகை குறைவு எனச் செய்திகளில் பார்த்தேன்.கவனமாக இருந்திருக்கலாம்.முருகன்
பதிலளிநீக்குநிறைவான சுகம் கொடுப்பார்.
களத்துமேடு,
பெயர் மாற்றியிருக்கிறீர்கள்.
களத்துமேட்டின் ஈழவன்.அழகாக இருக்கிறது.அருமை.வாழ்த்துக்கள்.
நன்றி ஹேமா, விபத்து என்பது சொல்லி விட்டு வருவதில்லை தானே! சனநெரிசலில் இப்படியான அனத்தம் ஏற்படின் கஸ்டமாகவே இருக்கும் எம்மவருக்கு எங்கும் சோதனை தான், கடவுள் காப்பாற்றுவார்.
பதிலளிநீக்கு