ஸ்ரீலங்காவின் மூத்த தமிழ் பேசும் பத்திரிகையாளரும் நவமணி பத்திரிகை பிரதம ஆசிரியருமான 61 வயதுடைய அல்ஹாஜ் எம்.பி.எம்.அஷ்ஹர் நேற்று மரணமானார். தினபதி, வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் பத்திரிகையாளராகக் கடமை புரிந்த அஷ்ஹர் 1969 - 1994 ஆம் ஆண்டு வரையான கால் நூற்றாண்டாக ஸ்ரீலங்கா பாராளுமன்ற செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார்.
"உறுமும் கடலும் உலவும் நதியும்" எனும் 25 வருட கால பாராளுமன்ற செய்தியாளரின் அனுபவப் பகிர்வு பற்றிய நூலினையும், "மாண்புறு ரமழானில் மனதுக்கினிய சிந்தனைகள்" எனும் இஸ்லாமிய நூலினையும் வெளியிட்டுள்ளார்.
1965 - 1969 ஆசிரியராக "புதுமைக்குரல்" பத்திரிகையிலும், 1968 - 1974 செய்தியாளராக "தினபதி" பத்திரிகையிலும் மற்றும் 1975 - 1994 செய்தியாளராக "வீரகேசரி" பத்திரிகையிலும் ஊடகவியலாளனாக பணிபுரிந்தமைக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அன்னாருக்கு களத்துமேட்டின் அஞ்சலிகள்.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் !
பதிலளிநீக்கு//இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் !//
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி எம்.ரிஷான்ஷெரிப்.