சனி, 16 ஆகஸ்ட், 2008
அமிரைத் தமிழர் தலைவராக ஏற்றுக் கொண்ட விடுதலைப்புலிகள் !
விமானக் குண்டு வீச்சில் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட 53 மாணவிகளின் 2 ஆம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் கலந்து சிறப்புரையாற்றினார்.
50 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பயங்கரவாதம் தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடாத்தி வருகின்றது, அறவழியில் போராடிய தமிழர் தலைவர்கள் இப் பயங்கரவாதத்துக்குப் பலியாகி உள்ளனர், 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்துக்கு எதிராக காலிமுகத் திடலில் அகிம்சை வழியில் போராட்டம் நடத்திய தமிழ் தலைவர்கள், தொண்டர்கள் தாக்கப்பட்டனர் என்றும் திரு.பா.நடேசன் சிறப்புரையில் குறிப்பிட்டிருந்தார்.
1956ஆம் ஆண்டு ஆனி மாதம் 5ஆம்திகதி பதவியேற்ற பிரதமர் பண்டாரநாயக்கா "சிங்களம் மட்டும் மொழி" என்னும் மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போது ஐக்கிய தேசியக் கட்சியும் இம் மசோதாவை ஆதரித்தது.
இம் மசோதாவை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன் இன்னோரன்ன 300 பேர் நாடாளுமன்றத்திற்கு முன்பாகவுள்ள காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தனர். அவ்விடத்துக்கு ஊர்வலமாக வந்த பிக்குகள் முன்னணியினர் சத்தியாக்கிரகத்தில் இருந்த தமிழர் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியதுடன் சிலரைத் தூக்கி அருகில் இருந்த ஏரியில் வீசி தங்களது துவேசத்தை வெளிப்படுத்தினர்.
நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழர்களின் தலைவர்களாக தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் யோகேஸ்வரன் போன்றோரையெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் நினைத்துப் பார்ப்பது ஆரோக்கியமான செய்தியாகவுள்ளது.
அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றோர் 1989.ஆடி.13 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளாலே சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, 1956 ஆனி 05 ஆம் திகதி சத்தியாக்கிரகத்தின் போது சிங்களக் காடையர்கள் தாக்குதலுக்கு இலக்கான தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் தலையிலுள்ள காயத்துடனேயே அன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு பிரசன்னமாகி இருந்தார்.
இவர்களை 19 வருடங்களின் பின்னர் தமிழர்களின் தலைவர்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டமையானது வரவேற்கத்தக்கதே!
4 கருத்துகள்:
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கடந்த சில செய்திகளையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருகிறது.நன்றி களத்துமேடு.
பதிலளிநீக்குஎம் அரசியலை அலசும் அறிவு எனக்கில்லை.என்றாலும் புரிந்தும் புரியாமலிக்கிறது.எமக்கு எம் மக்களுக்கு அமைதி வேணும்.அவ்வளவேதான்.
நன்றி ஹேமா,
பதிலளிநீக்குவரலாற்றுப் பதிவுகள் மறைக்கப்பட்டு வருவதால் அவற்றுக்கும் புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது அல்லவா?
கண்கெட்ட பின் சூரிய வணக்கம் என்பார்கள் அதுபோல இதுவும் ஒன்று. தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை மட்டுமல்ல பல தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் அறிஞர்கள் மாற்றுக் கொள்கையுடையவர்கள் என்று பலர் கொல்லப்பட்டு இன்று மக்களுக்காக சுயநலமற்ற சேவை செய்ய எவருமே இல்லாத நிலையை செய்துவைத்த பெருமையுடையவர்கள் அப்பாவி மக்களை எப்படிக் காப்பாற்ற முடியும்?
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
காலம் கடந்தாவது ஞானம் பிறக்கட்டுமே !
பதிலளிநீக்கு//கண்கெட்ட பின் சூரிய வணக்கம் என்பார்கள் அதுபோல இதுவும் ஒன்று. தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை மட்டுமல்ல பல தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் அறிஞர்கள் மாற்றுக் கொள்கையுடையவர்கள் என்று பலர் கொல்லப்பட்டு இன்று மக்களுக்காக சுயநலமற்ற சேவை செய்ய எவருமே இல்லாத நிலையை செய்துவைத்த பெருமையுடையவர்கள் அப்பாவி மக்களை எப்படிக் காப்பாற்ற முடியும்?
தகவலுக்கு நன்றி.//
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி செல்வா.