ஸ்ரீலங்கா அமைச்சரான மேர்வின் டி சில்வா அடாவடித்தனத்துக்குப் பெயர் பெற்ற ஒரு நபராகி விட்டார், இவர் எது செய்தாலும் தட்டிக் கேட்க ஆள் இல்லை எனும் நிலையே உருவாகி விட்டது.
ஊடகவியலாளர்களைத் தாக்கியது முதற்கொண்டு கடையடைப்பு காடைத்தனம் செய்வது வரையான அனைத்து குற்றச் செயல்களுக்கும் மூல கர்த்தாவாக மேர்வின் டி சில்வாவின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவரின் குற்றச் செயல்கள் எல்லை மீறிச் சென்றதால் கொழும்பு நீதவான் நீதிமன்று, இவரைக் கைது செய்யுமாறு பணித்தது, உடனே காவற்துறை தனது கடமையைச் செய்யாமல் இழுத்தடிப்புச் செய்தது.
இந் நிலையில் இன்று சட்டத்தரணிகளுடன் நீதிமன்றம் வந்த மேர்வின் டி சில்வாவுக்கு, நீதவான் 50 000 ரூபாய் ரொக்கப் பிணையும், 500 000 ரூபாய் சரீரப் பிணையும் வழங்கி விடுவித்துள்ளது.
எல்லைமீறிச் செயற்படும் அமைச்சர்களை தட்டிக் கேட்க திராணியற்ற நிலையில் ஸ்ரீலங்கா நீதி நிர்வாகம் அமைந்துள்ளது.
எங்கள் அரசியலை நினைத்து சிரிப்பதா...அழுவதா...?
பதிலளிநீக்குகளத்துமேடு உங்கள் ஒவ்வொரு பதிவையும் வந்து பார்த்துவிட்டு அமைதியாகப் போய்விடுகிறேன்.எம் மக்களின் அவதியும் வேதனையும் மட்டும்தான் தெரிகிறது கண்களில்.
என்னதான் பின்னூட்டம் போட!
நன்றி ஹேமா,
பதிலளிநீக்குஅரசியலுக்குத்
தலை குனிந்து
மௌனித்து நிற்கும்
நிர்வாகமும் நீதியும் !