சிங்கை வாலிபப் பருவத்தினரை அதிகம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அந் நாட்டுப் பிரதமர் லீ ஹஸியன் லூங் கோரிக்கை விடுத்துள்ளார். சிங்கப்பூர் பெண்ணின் சராசரி இனப்பெருக்க விகிதாசாரம் 1.29 குழந்தைகள் ஆகும், ஆனால் சனத்தொகையின் சமநிலையைப் பேண வேண்டுமாயின் சிங்கப்பூர் பெண்ணின் சராசரி இனப்பெருக்க விகிதாசாரம் 2.1 குழந்தைகள் என்று மாற்றப்பட வேண்டும்.
சிங்கைப் பெண்கள் தொழிலிம் மட்டும் அதிகம் நாட்டம் காட்டாமல் திருமணத்திலும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் சிங்கைப் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாருங்க களத்துமேடு.இக்கரைக்கு அக்கரை பச்சை என்கிறமாதிரி,
பதிலளிநீக்குஒவ்வொரு நாட்டின் வாழ்க்கைமுறை,சூழல் எவ்வளவு வித்தியாசப்படுது.ஒரு நாட்டில் ஒரு குழந்தை மட்டும் என்கிறார்கள்.
சிலநாடுகளில் ஒவ்வொரு குழந்தை பெற்றதும் ஊக்கப்பணம் கொடுக்கிறார்கள்.சில நாடுகளில் கணக்கில்லாமல் பெற்றுவிட்டு அவதிப்படுகிறார்கள்.
நம் நாட்டில் அளவோடு பெற்றுக்கொண்டாலும் அழித்து ஒழிக்கிறார்கள்.என்னப்பா
கொடுமை இது!
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஹேமா.
பதிலளிநீக்கு