
ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம் பெற்றுவரும் யுத்தத்தில் சிக்கித் தவிக்கும் வன்னிப் பகுதி மக்களுக்கு அநர்த்த நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. இரா. துரைரெத்தினம், அம் மாகாணசபைக்குக் கோரிக்கை விடுத்ததன் பேரில் மனிதாபிமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள கிழக்கு மாகாணசபை முடிவு செய்துள்ளது.யுத்தத்தால் பாதிப்புற்று இடம்பெயர்ந்துள்ள 150 000 பேருக்கும் மேற்பட்ட வன்னி மக்களுக்குக் தேவையான அவசர உதவிகளையும், அத்தியாவசியப் பொருட்களான உணவு, உடை, குழந்தைகளுக்கான பால்மா மற்றும் இதர பொருட்களையும் அனுப்ப கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் சி. சந்திரகாந்தன் உட்பட மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக இத் தீர்மானத்தை ஆதரித்துள்ளார்கள்.
விரைவில் இம்மக்களுக்கான அவசர உதவிகளும், அத்தியாவசியப் பொருட்களும் போய்ச் சேருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.