முற்காலத்தில் காளாத்தியப்பருக்கு கண்ணிரண்டையும் கொடுத்தார் கண்ணப்ப நாயனார், இது கதையா, கற்பனையா என்று விவாதக் களங்கள் உருவாகியுள்ள இக் காலத்தில், நவீன கண்ணப்பராக இந்திய பாகல்கோட்டை மாவட்டத்தின் பாதாமி தாலுகாவில் உள்ள அடகல் கிராமத்தைச் சேர்ந்த 41 வயதுடைய முதுகப்பா உருவெடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலையில் வீரபத்ரேசுவரா சுவாமிகள் கனவில் வந்து "முதுகப்பா உனது கண்ணை எனக்கு படையல் செய்" எனக் கேட்டதற்கிணங்க, உடனே சங்கரையா மடத்திலுள்ள வீரபத்ரேசுவரா கோவிலுக்குச் சென்ற முதுகப்பா தனது வலது கண்ணைத் தோண்டியெடுத்து சிலைக்கு படையல் செய்துள்ளார்.
நம்பவே முடியாமல் இருக்கின்றதல்லவா, ஆம் இப்போது முதுகப்பா பாகல்கோட்டை அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டு வருகின்றார்.
இது மிக மோசமான பைத்தியக்காரத்தனம். அந்த நபருக்கு புத்திசுவாதினம் இருக்காது என்றே நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் கோவி.கண்ணன், வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு//இது மிக மோசமான பைத்தியக்காரத்தனம். அந்த நபருக்கு புத்திசுவாதினம் இருக்காது என்றே நினைக்கிறேன்.//
சித்தசுயாதீனம் அற்றவர் என்றே நானும் நினைக்கின்றேன், சிலர் பக்தியின் உச்சக்கட்டம் என்று வரைவிலக்கணம் சொல்லக்கூடும்.
இந்தக் காலத்திலுமா!என்கிற மாதிரி இருக்கு.மூடத்தனங்களுக்கு ஒரு அளவேயில்லையா?சாமி பெயரில் ஆசாமிகள் படும் பாடு.மனுசனைப் படைச்ச சாமியே மனுசனைப் பார்த்து பயப்படும் காலமாயிருக்கு.
பதிலளிநீக்குஎன்ன களத்துமேடு இரண்டு நாளாக என் தளம் எட்டிப் பாக்க இல்லையோ?கொஞ்சம் சொல்லியிருக்கலாமே!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநன்றி ஹேமா,
பதிலளிநீக்குஇந்தியாவில் சாமிமார் படும் பாடு உங்களுக்குத் தெரிந்தே !
சாமிமார் இந்தியச் சிறைகளில் அடைக்கப்படுகின்றார்கள், அதேவேளையில் புதுச் சாமிமார் உருவாக்கப்பட்டும் வருகின்றார்கள், இதுவும் ஓர் அரசியல் கலந்த பக்தி தான்!
படிப்பறிவு குன்றிய பகுதிகளில் புகுந்து கொள்ளும் இச் சித்தர்கள் மூடநம்பிக்கையை கடவுளின் பெயரால் பரப்புவதுடன் அப்பாவிகளான முதுகப்பாக்கள் மீது இலகுவாகத் தாக்கம் செலுத்துகின்றனர், இதன் விளைச்சல் பக்தர்களின் கனவுகளில் கடவுளர்களின் நடமாட்டம்!
என்ன செய்வது கடவுளின் பெயரில் இப்படியுமா?