08.08.'08, 08:08 இரவு மணிக்கு ஆரம்பமான ஒலிம்பிக் போட்டியில் 302 பதக்கங்களை வெற்றி கொள்வோர் யாரென்பதை சர்வதேசம் கவனித்து வருகின்றது, அதிலும் முதல் பதக்கத்தைப் பெற்று பெயர் பதிக்க வேண்டுமென்பதில் சீனா மிகவும் கவனமாக இருக்கின்றது.
துப்பாக்கி சுடுதல் போட்டியிற்கான பதக்கமே முதலில் வழங்கப்படவுள்ளது, கடந்த எதேன்ஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற டூ லீ, இம்முறையும் 10 மீற்றர் வாயு துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஏதாவது இடையூறு ஏற்படின் அடுத்ததாகவுள்ள சீன வீராங்கனை நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வார் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தப் போட்டியில் சீனா தங்கப் பதக்கத்தினைப் பெறத் தவறினால் இதற்கான பரிசளிப்பை ஒத்திபோட சீனா நினைத்துள்ளது. இதனால் இவ்வேளையில் பாரம் தூக்கும் போட்டிக்கு வழங்கப்படும் முதல் தங்கப் பதக்கத்தை சென்ஜியாஜியா சீனாவுக்குப் பெற்றுக் கொடுப்பார் என எதிப்பார்க்கப்படுகின்றது.
யார் வாங்க மாட்டங்கனு கேட்டால் உடனே சொல்லுவேன்..நம்மாளுங்கன்னு...!
பதிலளிநீக்குநீங்க கேட்டது கொஞ்சம் கஷ்டமான கேள்விதான்.
நன்றி நாஞ்சில் பிரதாப், பதக்கம் எமது பக்கம் திரும்பினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை அல்லவா?
பதிலளிநீக்குசெக்கோஸ்லேவேக்கியா குட்டி நாடு முதல் தங்கத்தை தட்டிச்சென்று விட்டது.
பதிலளிநீக்கு//செக்கோஸ்லேவேக்கியா குட்டி நாடு முதல் தங்கத்தை தட்டிச்சென்று விட்டது//
பதிலளிநீக்குநடக்குமென்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும்.
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி ராஜநடராஜன்.