ஒலிம்பிக் போட்டிக்கென ஸ்ரீலங்காவில் இருந்து சென்ற எண்மரில் எவரும் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகாத நிலையில் நாடு திரும்பவுள்ளனர்.
குத்துச் சண்டை வீரர் அனுருத்த ரத்னாயக்க, பாரம் தூக்கும் வீரர் சிந்தன விதானகே, நீச்சல் வீரர் டானியல் லீ, துப்பாக்கி சுடும் வீரர் செனநாயக்க, பெட்மிண்டன் வீராங்கனை திலினி ஜயசிங்க, ஈட்டி எறியும் வீராங்கனை நதீகா லக்மாலி மற்றும் நீச்சல் வீராங்கனை மயூமி றஹிம் ஆகியோர் முதற் சுற்றுப் போட்டியுடனேயே தோல்வியுற்று வெளியேறினர். ஆனால் குறுந்தூர ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க 200 மீற்றர் ஓட்டத்தில் அரையிறுதிப் போட்டியில் 22.98 வினாடிகளில் ஓடி ஏழாவது இடத்தைப் பிடித்ததால் தோல்வியுற்றார்.
ஜமைக்காவின் வெரோனிக்கா கம்பல் 200 மீற்றர் தூரத்தை 22.19 வினாடிகளில் ஓடி முதலிடத்தையும், ஜமைக்காவின் ஸ்டுவட் கரோன், அமெரிக்காவின் மூனா லீ ஆகிய இருவரும் 22.29 வினாடிகள் ஓடி இரண்டாம், மூன்றாம் இடங்களையும், பஹாமாசின் பெர்கியூசன் 22.51 வினாடிகள் ஓடி நான்காம் இடத்தையும் பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கின் 200 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் சுசந்திகா ஜயசிங்க மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை ஸ்ரீலங்காவுக்குப் பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
,d;W gjpTpw;F te;Njd; ed;whf ,Uf;fpwJ>
பதிலளிநீக்குVjhtJ vOjyhk; vd;why;> vdJ AdpNfhl; jl;lr;rpy; vOjpdhy; xd;Wk; Ntiyf;F Mfkhl;Nld;fpwJ.
VjhtJ ,jw;F cq;fshy; cjtKbAkh? rPH nra;a?.
vdJ gjpitAk; ghHf;fTk;…. fhyf;fpWf;fd;
njhlHe;J vOj Kbatpy;iy.
Pls. read with amudam or Amma fonts. my unicode Key board not working to write in tamil
thanks.
//இன்று பதிவுற்கு வந்தேன் நன்றாக இருக்கிறது,
பதிலளிநீக்குஏதாவது எழுதலாம் என்றால், எனது யுனிகோட் தட்டச்சில் எழுதினால் ஒன்றும் வேலைக்கு ஆகமாட்டேன்கிறது.
ஏதாவது இதற்கு உங்களால் உதவமுடியுமா? சீர் செய்ய?.
எனது பதிவையும் பார்க்கவும்…. காலக்கிறுக்கன்
தொடர்ந்து எழுத முடியவில்லை.//
வருகைக்கு நன்றி ஜோசப் இருதயராஜ்.
"களத்துமேட்டின்" இடது கீழ்ப் பக்கத்தில் பயன்தகு வலைக் களங்கள் உள்ளன, அதில் ஈ கலப்பை எனும் சுட்டியை பயன்படுத்தி யுனிகோட்டை தரவிறக்கிக் கொள்ளலாம்.
அத்துடன் தமிழ் எழுத்துரு எனும் சுட்டியும் உள்ளது அதனை சுட்டுவதன் மூலம் சுரதாவின் பொங்குதமிழ் பெட்டி உள்ளது அதில் தட்டச்சு செய்து யுனிக்கோட்டுக்கும் மாற்றம் செய்யலாம்.
அங்கு சென்றே உங்களது பின்னூட்டத்தையும் வாசித்தேன். "காலக்கிறுக்கனை" படித்து விட்டு விரைவில் பின்னூட்டமிடுவேன்.