தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அண்மையில் எழுதிய விமர்சனக் கட்டுரையில், காதோரம் ஒரு முடி நரைத்ததற்கே தசரதன் ராமனை மன்னராக்கினான். ஆனால் கருணாநிதியோ இன்னும் முதல்வர் பதவியை விடாமல் பிடித்திருக்கிறார் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதற்கு கவிதை வடிவில் மு.கருணாநிதி பதில் சொல்லி இருந்தார்.
ஆழ்வார்கள் புராணம்
விடுதலைப் போர் நாயகராம்
விருதுநகர் மாவீரர் காமராஜரின்
விசுவாசமிக்க சீடர் என்று
விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்
வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்
விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!
அண்ணாவின் அணிவகுப்பில் நானும் ஒருவன் என நவின்று
கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!
மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்
முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றி விட்ட எட்டப்பன்!
குன்றணைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க
குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென
தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;
தான் மட்டுமே தப்பி வந்த ஆஞ்சநேயன்!
வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே
குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!
தரணிதனில் பல புராணங்கள் இருக்க
தசரதன் புராணத்தில் இவர் இறங்கி
அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை- தன் கட்டுரைக்கு
விதையாக்கி விஷத்தைக் கக்கியிருப்பததுதான் பெரும் விந்தை!
சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!
கூராக்கவே இயலாத மூளையிலே விஷம் ஒரு மொந்தை!
------------------- மு.கருணாநிதி
எனக்குப் புரியவில்லை களத்துமேடு.
பதிலளிநீக்குகொஞ்சம் விளக்குங்களேன் நெடுமாறனை பற்றி.
எல்லாம் பாசாங்கா?
//எனக்குப் புரியவில்லை களத்துமேடு.
பதிலளிநீக்குகொஞ்சம் விளக்குங்களேன் நெடுமாறனை பற்றி.
எல்லாம் பாசாங்கா?//
நீண்ட காலமாக தமிழக முதல்வர் பதவிக்காக காத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளில் நெடுமாறனும் ஒருவர்.
அவரின் அரசியல் வியாபாரத்துக்கு கிடைத்திருப்பது ஈழத் தமிழர்கள் பிரச்சனை எனும் துரும்பு.
முன்னொரு காலத்தில் நெடுமாறனின் கருத்துக்களும் தமிழ்நாட்டில் எடுபட்டது என்பது உண்மை தான், ஆனால் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவின் கொலைக்குப் பின் ஈழத் தமிழர்கள் மீதான பார்வையில் மாற்றம் ஏற்பட்டது, இப்போது அண்மைக் காலமாக அதிலும் ஒரு முன்னேற்றம் தெரிவதுடன் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனே ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை எண்ணிப் பார்க்கும் நிலைக்கு மாற்றம் கண்டிருப்பது ஆரோக்கியமானதாகும்.
இத் திறந்த ஊடகத்தில் இந்திய தமிழக அரசியல்வாதிகளான கருணாநிதி, நெடுமாறன் போன்றோரினை விமர்சிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பதால் சுருங்கக் கூறுவதெனில் நெடுமாறனும் ஓர் அரசியல்வாதியே தான்.
நன்றி களத்துமேடு.நீங்கள் விளக்கம் சொல்வது போலவே நானும் சிலரைக் கணக்கில் வைத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஈழத்தமிழர் பெயரில் தங்கள் பெயரையும் புகழையும் உலக நாடுகளில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
//ஹேமா said...
பதிலளிநீக்குநன்றி களத்துமேடு.நீங்கள் விளக்கம் சொல்வது போலவே நானும் சிலரைக் கணக்கில் வைத்திருக்கிறேன்.
ஈழத்தமிழர் பெயரில் தங்கள் பெயரையும் புகழையும் உலக நாடுகளில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.//
பொதுவாக வை.கோவை விட ஈழத் தமிழர் பிரச்சனையில் நெடுமாறனின்
பணி பாரட்டுதற்குரியது என்று சொல்லபட்டு வந்ததே?
சான்றுகளுடன் விளக்கவும்.
இந்திராகாந்தி அவர்களது தமிழக வருகையின் போது ஆட்சிக் கலைப்பில் கோபமாய் இருந்த கழக தொண்டர்களின் கோபத்தில் இருந்து, தன் உயிரையும் பொருட் படுத்தாமல் இந்திரா காந்தி அசவர்களை நெடுமாறன் காப்பற்றிய செய்தி உண்மையா?
பின்னர் சதிகலால் அவர் ஓரங்கட்டபட்டாரா?
இல்லை கலைஞர் கவிதை சொல்லும் செய்திகள் உண்மையா?
விரிவான விளக்கம் தேவை.
தியாகிகளின் தியாகம் கொச்சைபடுத்துதலும் தவறு.
முகமூடி அரசியல் வியாபரம் மலிவு விளம்பரத்ட தந்திரமும் தவறு.
உண்மையென்ன?
ரமணா உங்களின் வருகைக்கும் வினாக்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குதிறந்த ஊடகத்தில் இந்திய தமிழக அரசியல்வாதிகளை விமர்சிப்பது ஆரோக்கியமாக இராது என்பதால் தவிர்க்கப் பார்க்கின்றேன்.
நெடுமாறன் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை என்பதை எவராலும் மறுதலிக்க முடியாது, கோபாலசாமி குரல் கொடுத்தாலும் கூட அவரின் இடத்துக்கு வர முடியாது ஆனாலும் நெடுமாறன் சொந்த அரசியலுக்காகவே "ஈழத் தமிழர்கள்" எனும் சொற்பிரயோகத்தை அதிகமாகவே பயன்படுத்துகின்றார், அவருக்கு தமிழகத்தில் சொல்லும் படியாக அதிக வாக்குவங்கியும் கிடையாது. அதனால் தானோ என்னவோ ஈழத் தமிழர்களின்பால் நெடுமாறனுக்கு நாட்டம் அதிகம்.
கருணாநிதி சுத்தமானவரென கருத்துச் சொல்ல முடியாது.
எது எப்படி இருப்பினும் இவர்களின் சர்வதேச அரசியல் விளம்பரத்துக்கு ஈழம் எனும் சொற்பதம் அவசியம் தேவை.