செவ்வாய், 26 ஆகஸ்ட், 2008
மாவீரன் பண்டாரவன்னியனின் 205 ஆம் வெற்றி விழா !
வன்னி இராஜ்ஜியத்தின் இறுதிக் குறுநில மன்னனாக இருந்து 1803.08.25 ஆம் நாள் முல்லைதீவில் எம்மை ஆக்கிரமித்த ஆங்கிலேயரையும் அவர்களின் கோட்டையையும் அழித்து அங்கிருந்த மூன்று பீரங்கிகளையும் கைப்பற்றி வீரவாகை சூடிய மாவீரன் பண்டாரவன்னியனின் 205 வது வெற்றி விழா நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.
கற்சிலைமடுவில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் உருவச்சிலை வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பண்டாரவன்னியன் நினைவுக்கல் நடப்பட்டு விழா சிறப்பாக நடந்தேறியது.
(குறிப்பு படத்தில் இருக்கும் கல்வெட்டு கணினியில் வரைந்தது)
3 கருத்துகள்:
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிழகத்தில் இருக்கும் வன்னியர்களுக்கும்,இலன்கை வன்னியர்களூக்கும் சம்பந்தமுண்டா?
பதிலளிநீக்குவரலாறு மறக்காமல் பதிவு போட்டுள்ளீர்கள். நன்று.
வருகைக்கு நன்றி ச.முத்துவேல்.
பதிலளிநீக்கு//தமிழகத்தில் இருக்கும் வன்னியர்களுக்கும்,இலன்கை வன்னியர்களூக்கும் சம்பந்தமுண்டா?
வரலாறு மறக்காமல் பதிவு போட்டுள்ளீர்கள். நன்று.//
தமிழக வன்னியர்களுக்கும் இலங்கை வன்னியர்களுக்கும் உள்ள சம்பந்தம் தொடர்பாக பாரிய தேடல்கள் அவசியம்.
எனது அறிவுக்கு எட்டிய தகவல்களின் படி, இலங்கையில் ஆட்சி செய்த உக்கிரசிங்கசேனனுக்கும் மாருதப்புரவைக்கும் பிறந்த சிங்க மன்னனைத் திருமணம் செய்யவென மதுரை மன்னன் மகள் சாமதூதியும் அவளுடன் வந்த 60 வன்னியர்களும் "அடங்காப்பற்று" பிரதேசத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்ததாகவும் இப் பிரதேசமே பின்னர் "வன்னி"யென அழைக்கப்பட்டதாக "வையாபாடல்" எனும் சரித்திரம் கூறுகின்றது.
மிக்க நன்றி.பொறுப்போடு பதில் இட்டுள்ளீர்கள்.
பதிலளிநீக்கு