
ஸ்ரீலங்காவின் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மூன்றாமாண்டு முகாமைத்துவ வர்த்தக பீடத்தில் கல்வி பயின்ற 22 வயதுடைய குருநாகல் புத்துஹரவைச் சேர்ந்த சிங்கள மாணவன் சுச்சரித்த பசன் சமரசிங்க நேற்று இரவு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இப் படுகொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் மூன்றாமாண்டு விவசாய பீட மாணவன் எஸ்.சிசிதரன், அங்கு பணியாற்றும் முரளிதரன் மற்றும் இரு காவலர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிழக்கிலங்கையின் மட்.வந்தாறுமூலை பல்கலைக் கழகத்தின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 180 சிங்கள மாணவர்கள், இக் கொலைச் சம்பவத்தின் பின்னர் தமது சொந்த இடங்களான சிங்களப் பகுதிக்கு திரும்பினர்.
கடந்த வாரம் இடம்பெற்ற பகிடிவதைக்கும் இம்மாணவனின் கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாக மாணவர்களிடையே ஒத்த கருத்து நிலவுகின்றது.

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.