இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 ஆம் திகதி ஸ்ரீலங்கா படையினராலும், சம்மாந்துறை முஸ்லிம் இனவாதிகளினாலும் 200 பேருக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், இச் செய்தி அரசினால் திட்டமிட்டு ஊடகங்களில் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.
விடுதலைப் புலிகளை அழிக்கின்றோம் எனக் காரணம் காட்டி திட்டமிட்டு அம்பாறை மாவட்டத்தில் இனச் சுத்திகரிப்பு ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்பட்டது.
அம்பாறையில் காலம் காலமாக வாழ்ந்த தமிழர்களும், அம்பாறைக்கு அருகில் இருந்த வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, மற்றும் வீரச்சோலை கிராமத்தவர்கள் ஸ்ரீலங்கா படையினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியோர் உடுத்த உடையுடன் அகதிகளாக வீரமுனைக்கு ஓடி வந்து பாடசாலையிலும் ஆலயத்திலும் தங்கினர்.
இங்கு தமிழர்களுக்கான சுத்திகரிப்பை அரங்கேற்ற ஸ்ரீலங்கா படையினரும், சம்மாந்துறை முஸ்லிம் இனவாதிகளும் இணைந்து பாடசாலையிலும் ஆலயத்திலும் தங்கியிருந்த அகதிகளை கண்டபடி கோடரி, வாள் போன்ற கூரிய ஆயுதங்களினால் வெட்டியும், துப்பாக்கிப் பிரயோகமும் செய்து கொலை செய்தனர்.
இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப், திஹாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தயாரட்ண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.திவ்வியநாதன் போன்றோர் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலைவெறித் தாக்குதலுக்குப் பலியான 200 பேருக்கும் மேற்பட்ட குழந்தைகள், தாய்மார்கள்,ஆடவர்கள், பெண்கள் மற்றும் மாணவர்களை நினைவு கூர்ந்து 18 ஆம் சிரார்த்த தினமும், நினைவுத் தூபியும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நினைவுத் தூபியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு. இனியபாரதி திறந்து வைத்தார்.
மீண்டும் இக் கிராமங்களில் இனச்சுத்திகரிப்பின் பேரால் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமலும், ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமான நினைவுத் தூபி சிதையாமலும் பாதுகாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
வணக்கம் களத்துமேடு.
பதிலளிநீக்குமாண்டுகொண்டிருக்கும் எம் இனத்திற்கு கல்லறைகளும் தூபிகளும் எழுப்பிக் கொண்டிருக்கிறோம்.அவர்களின் ஆன்மா சாந்திக்காகவும் வேண்டி நிற்கிறோம்.ஆனல் எம் இனம் அழிந்து ஒடுக்கப் பட்டுக் கொண்டே போகிறது.இதற்கு எப்போ விடிவு காலம்?துணிச்சலாகச் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.
மறக்கப்படக்கூடாத சுவடுகளை காலத்தால் அழியாமல் காப்பது சிறந்த பணியே.
பதிலளிநீக்குஆனாலும் இந்தக் கல்லறைகளும் தூபிகளும் எமது பலவீனங்களை அகற்றும் சிந்தனையை கொடுக்குமானால் அதன் யதார்த்தப் பயனை அதிகமாகவே அடையக் கூடியதாயிருக்கும்.
ஹேமா தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
பதிலளிநீக்குமனதைக் குடைந்து கொண்டிருக்கும் விடயங்களுக்கான பகிர்தலே இதுவென நினைக்கின்றேன்.
வந்து கருத்திட்ட நிர்ஷனுக்கு நன்றி.
பதிலளிநீக்கு